"தளபதி செம்ம..." இளமையான விஜய்யின் போட்டோ பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம்!

By Vignesh Selvaraj

சென்னை : விஜய்யின் 62-வது திரைப்படம் முருகதாஸ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகிறது. இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் சென்னையில் தொடங்கியுள்ளது.

'கத்தி' படத்தைப் போல இப்போதும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட கதையைத்தான் படமாக்குகிறார் முருகதாஸ்.

'விஜய் 62' படத்தில் விஜய்யின் நியூ லுக் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.

விஜய் 62

விஜய் 62

விஜய்யை வைத்து 'துப்பாக்கி', 'கத்தி' ஆகிய படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்யின் 62-வது படத்தை தற்போது இயக்கி வருகிறார். துப்பாக்கி படத்தில் ராணுவ வீரரைப்பற்றிய கதையை படமாக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், கத்தியில் விவசாயிகள் பிரச்னையை படமாக்கினார். 'விஜய் 62' படத்திலும் விவசாயிகள் பிரச்னை பேசப்படுகிறதாம்.

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

விஜய்யின் 62-வது படமான இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். சென்னை முட்டுக்காடு பகுதியில் 'விஜய் 62' ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

ஷூட்டிங் தொடக்கம்

ஷூட்டிங் தொடக்கம்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராகவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். கடந்த ஜனவரி 19-ம் தேதி முதல் பூஜையுடன் துவங்கிய படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

டைட்டில்?

டைட்டில்?

'தளபதி 62' படத்தை இந்த ஆண்டு தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். வெகு விரைவில் 'விஜய் 62' படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இப்படத்தின் அப்டேட்ஸ் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

நியூ லுக்

நியூ லுக்

'விஜய் 62' படத்தின் நியூ லுக் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. இந்தப் புகைப்படத்தில் விஜய் இன்னும் இளமையான தோற்றத்தில் இருக்கிறார். இந்தப் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X