'தளபதி 62' ஷூட்டிங் எங்கே... எத்தனை நாள்?

By Vignesh Selvaraj

Recommended Video

விஜய் 62 படத்தின் ஷூட்டிங் துவங்கியது..!!

சென்னை : விஜய்யின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இந்த கூட்டணி இணைவது இது மூன்றாவது முறை என்பதால் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சன் பிக்‌சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். யோகிபாபு காமெடி வேடத்தில் நடிக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Vijay 62 shooting schedule

விஜய்யின் திரைப் பயணத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்த 'துப்பாக்கி', 'கத்தி' ஆகிய படங்கள் முக்கியமானவையாகும். சமூக நோக்கத்துடன் எடுக்கப்பட்ட அந்தப் படங்களைப் போலவே விஜய் நடிக்கும் 62-வது படம் விவசாயிகளை மையமாக வைத்து உருவாகிறது.

படத்திற்கான போட்டோஷூட் ஏற்கனவே முடிந்து, புகைப்படங்கள் சில மணி நேரங்களில் லீக் ஆகி சமூக வலைதளங்களில் செம வைரல் ஆனது. இந்நிலையில் தளபதி 62 படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் துவங்கியிருக்கிறது. விஜய் கலந்துகொண்ட பூஜை புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

வரும் தீபாவளிக்கு வெளியாகும் 'விஜய் 62' படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். ஏனெனில் அஜித்தின் விசுவாசம், சூர்யா படம் என மூன்று பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாக இருக்கிறது.

தற்போது, விஜய்யின் 62-வது படத்தின் படப்பிடிப்பு விஜய்யின் கிளாப்போடு தொடங்கியுள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் 30 நாட்களும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடத்தவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X