'விஜய் 62' ஷூட்டிங் ஸ்டார்ட்ஸ் நவ்... விஜய்யின் கிளாப்போடு துவங்கிய 'தளபதி 62'!
Recommended Video

சென்னை : நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இந்த கூட்டணி இணைவது இது மூன்றாவது முறை என்பதால் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
படத்திற்கான போட்டோஷூட் ஏற்கனவே முடிந்து, புகைப்படங்கள் சில மணி நேரங்களில் லீக் ஆகியிருந்தது. அது படக்குழுவுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
இந்நிலையில் தளபதி 62 படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் துவங்கியிருக்கிறது. விஜய் கலந்துகொண்ட பூஜை புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

விஜய் 62
'மெர்சல்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் அடுத்து யார் படத்தில் நடிக்கப்போகிறார் எனும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது. மெர்சல் படம் வெளிவருவதற்கு முன்பே கசிந்த தகவல்படி ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கிறார் விஜய்.

விஜய் - முருகதாஸ் கூட்டணி
விஜய்யின் திரைப் பயணத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்த 'துப்பாக்கி', 'கத்தி' ஆகிய படங்கள் முக்கியமானவையாகும். சமூக நோக்கத்துடன் எடுக்கப்பட்ட அந்தப் படங்களைப் போலவே மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 62-வது படமும் உருவாகிறது.

கீர்த்தி சுரேஷ்
சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். 'பைரவா' படத்தை அடுத்து மீண்டும் கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் ஜோடி சேர்கிறார்.

விஜய் 62 படக்குழு
'விஜய் 62' படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'சோலோ' புகழ் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யவுள்ள இந்தப் படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றவுள்ளனர்.

விவசாயம் பற்றிய படம்
இந்தப் படத்தில் 'கத்தி' படத்தைப் போலவே விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அதில் மாற்றுத்திறனாளி வேடம் ஒன்றிலும் நடிப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. மெர்சல் படத்தில் இலவச மருத்துவம் குறித்து பேசிய விஜய், இந்த புதிய படத்தில் விவசாயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைப் பேச இருக்கிறாராம்.

விவசாயிகள் பிரச்னை
சமீபகாலமாக தமிழகத்தில் விவசாயிகள் மத்தியில் வெடித்துள்ள ஹைட்ரோ கார்பன் போராட்டம் உள்ளிட்ட சில விவசாய பிரச்னைகளுக்கு இந்த படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதாம். சமூக அக்கறையுள்ள ஒரு இளைஞனின் கோபத்தின் வெளிப்பாடுதான் இந்தப் படத்தின் கதை. விஜய், இப்படத்தில் விவசாயியாக நடிக்கவிருக்கிறார்.
ஷூட்டிங் ஆரம்பம்
'விஜய் 62' படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் இன்று தொடங்கி இருக்கிறது. நடிகர் விஜய் கிளாப் போர்டு அடித்து ஷூட்டிங்கை தொடங்கி வைத்தார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முருகதாஸ் ட்வீட்
இந்த நிலையில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "ஹேப்பி தீபாவளி மக்களே" என பதிவு செய்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











