விஜய் 62: வயதான 'தளபதி'... புது கெட்டப்புக்கு மாறுகிறார் விஜய்!
Recommended Video

மெர்சல் படத்தின் பிரமாண்ட வெற்றி, விஜய்யின் 62 வது படத்துக்கான எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது. தினமும் படம் குறித்த பரபர தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடிக்கும் படம் இது. சமூக அக்கறை கொண்ட கதையாக உருவாகியுள்ள இந்த ஸ்க்ரிப்டில் இன்றைய அரசியல் சூழலும் இடம் பெற்றுள்ளதாம்.

இந்தக் கதையில் விஜய்க்கு இரட்டை வேடங்கள் என தகவல் கசிந்துள்ளது. அதில் ஒரு கெட்டப் நடுத்தர வயதுக்காரராம். இதுவரை இல்லாத அளவு முற்றிலும் மாறுபட்ட தோற்றமாக இருக்கும் என விஜய் 62 வட்டாரங்கள் நம்மிடம் தெரிவித்தன.
இந்தப் படத்துக்காக துடிப்பான, முற்றிலும் புதிய இளைஞர்களை உதவி இயக்குநர்களாகச் சேர்த்துள்ளாராம் முருகதாஸ்.
அண்மையில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஸ்பைடர், அகிரா இரு படங்களுமே சொல்லிக் கொள்கிற மாதிரி அமையவில்லை. உடனடியாக ஒரு பெரும் வெற்றி தேவை என்பதால், இந்தப் படத்தை மிகக் கவனமாக வடிவமைத்து வருகிறாராம் முருகதாஸ்.


Click it and Unblock the Notifications











