'பிகில்..' வெளியானது விஜய் படத்தின் டைட்டில்.. ரசிகர்கள் ஆரவாரம்
Recommended Video
சென்னை: விஜய் நடிக்கும் 63வது திரைப்படத்திற்கு பிகில் என பெயரிடப்பட்டுள்ளது.
அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படத்திற்கு தளபதி 63 என தற்காலிகமாக பெயர் சூட்டியிருந்தனர். இந்த நிலையில், நாளை விஜய் பிறந்தநாள் என்பதால், அதையொட்டி, இன்று, திரைப்படத்தின் பெயரை வெளியிட படக்குழு முடிவு செய்தது.

தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு, 3வது முறையாக அட்லி-விஜய் கூட்டணி சேர்ந்த படம் என்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு, படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும், படத்தின் பெயர் வெளியிடப்படும் என படக்குழு நேற்று முன்தினம், அறிவித்திருந்தது.
அதன்படி, இன்று மாலை சரியாக 6 மணிக்கு, படத்தின் பர்ட்ஸ்லுக்குடன், படத்தின் பெயர் வெளியிடப்பட்டது. படத்தின் பெயர் பிகில் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிகில் என்றால் லோக்கல் தமிழில் விசில் என்றும் ஒரு அர்த்தம் உண்டு.
இதில் விஜய் 2 வேஷங்களில் நடிக்கிறார். அதில் ஒரு கதாப்பாத்திரத்தின் செல்லப் பெயர் பிகில் எனக் கூறப்படுகிறது. எனவேதான், இப்படத்திற்கு இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளதாம். என்ன ரசிகர்களே, பிகிலுக்கு விசிலடிக்க ரெடியா!


Click it and Unblock the Notifications