நீங்கள் நினைப்பது போல இருக்காது.. விஜய் 64ல் சர்ப்ரைஸ் கொடுக்கும் லோகேஷ் கனகராஜ்.. மாஸ் பின்னணி!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் கதை வித்தியாசமான பாணியில் தயாராகி வருவதாக கூறுகிறார்கள்.

Recommended Video

Thalapathy 64 Movie Update : Villain Announced?

சென்னை: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் கதை வித்தியாசமான பாணியில் தயாராகி வருவதாக கூறுகிறார்கள்.

பிகில் படத்திற்காக நடிகர் விஜய் ரசிகர்கள் தீவிரமாக காத்துக் கொண்டு இருக்கின்றனர் . சக் தே இந்தியா பாணியில் உருவாகி இருக்கும் பிகில் படம் பக்கா அட்லீ - விஜய் ஸ்டைல் மூவி என்கிறார்கள்.

ஆனால் இந்த படம் வெளியாவதற்கு முன்பே விஜய் தன்னுடைய அடுத்த பட வேலைகளில் இறங்கிவிட்டார். விஜய் 64 படத்திற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

யார் இயக்குகிறார்

யார் இயக்குகிறார்

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் இந்த படத்தின் இயக்குனர். அனிரூத் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். இந்த பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் வித்தியாசமான போஸ்டர் ஒன்றும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சூப்பர்

சூப்பர்

லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம்தான் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே வித்தியாசமான திரைக்கதை மூலம் மக்களை கவர்ந்தார். அதிலும் இளம் நடிகர்களை வைத்து, சீட் நுனிக்கு செல்லும் அளவிற்கு அவர் உருவாக்கிய திரில்லர் பெரிய அளவில் வரவேற்கப்பட்டது.

நல்லது

நல்லது

முக்கியமாக அந்த படத்தில் நடிகர் ஷா ரா மற்றும் முனிஷ்காந்த் வரக்கூடிய இடங்கள் நன்றாக வொர்க் அவுட் ஆகி இருந்தது. அவர்களின் காமெடி போகிற போக்கில் எல்லோரையும் சிரிக்க வைத்தது. டார்க் காமெடி (சீரியஸான இடத்தில் காமெடி செய்வது) வகையில் அவர்கள் வரும் காட்சிகள் உருவாக்கப்பட்டு இருந்தது.

அதேதான்

அதேதான்

தற்போது தளபதி 64 படத்தையும் அதேபோல் முழுக்க முழுக்க டார்க் காமெடி படமாக எடுக்க இருக்கிறார்களாம். ஆம், மிகவும் சீரியஸான கதை களம் ஒன்றை எடுத்துக் கொண்டு அதை காமெடியாக அணுக போகிறார்களாம். ஆனால் படத்தில் திரில்லருக்கு பஞ்சம் இருக்காது என்றும் கூறுகிறார்கள்.

எப்படி இருக்கும்

எப்படி இருக்கும்

தமிழில் வந்த மிக சிறந்த டார்க் ஹியூமர் வகை படங்களில் சூது கவ்வும் இப்போதும் முக்கிய படமாக இருக்கிறது. அந்த படத்தின் கதை மிகவும் சீரியசான கதை என்றாலும், முழுக்க முழுக்க காமெடிகளை வைத்து வித்தியாசமாக படத்தை உருவாக்கி இருப்பார்கள். அப்படித்தான் இந்த தளபதி 64 படத்தையும் உருவாக்க இருக்கிறார்களாம்.

 வர வாய்ப்பு

வர வாய்ப்பு

இதனால் விஜயின் படத்தில் வில்லனுக்கு முக்கிய கதாபாத்திரம் இருக்கும் என்கிறார்கள். இதனால் வில்லன் பாத்திரத்திற்கு ஒரு முக்கியமான நடிகரை பேசி வருகிறார்கள். சமயத்தில் கேரளாவை சேர்ந்த நடிகர் ஒருவர் இந்த படத்திற்காக தமிழுக்கு வரலாம் என்றும் கூறுகிறார்கள்.

வருடங்கள்

வருடங்கள்

விஜய் வித்தியாசமான கதை களத்தில் நடித்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது. அதனால் இந்த படத்தை வித்தியாசமாக உருவாக்க இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. கண்டிப்பாக இது யாரும் எதிர்பார்க்கும் வகையில் இருக்காது என்று பேசிக்கொள்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X