ஆல்பம் சூப்பரா வந்துருக்கு.. ரசிகரின் கேள்விக்கு அனிருத் அதிரடி பதில்

சென்னை : அனிரூத் தமிழ் சினிமாவின் மிக முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர். இவர் தற்போது ரஜினியின் தர்பார் படத்திற்கும் விஜயின் தளபதி 64 படத்திற்கும் இசையமைத்து வருகிறார். கடைசியாக அனிரூத் ரஜினியின் பேட்ட படத்திற்கு இசையமைத்து இருந்தார் .

அனிரூத் தொடர்ந்து பெரிய ஹீரோ படங்களுக்கு இசையமைத்து பிஸியாக இருந்து வருகிறார். இருப்பினும் தனக்கு கிடைக்கும் நேரத்தில் சமூக தளங்களில் ரசிகர்களுடன் நட்பு பாராட்டி வருகிறார். அனிரூத் நேற்று ஆஸ்க் அனிரூத் என்ற ஹாஸ்டேக் மூலம் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறினார் .

vijay 64 music has come massive says aniruth

அப்போது விஜய் ரசிகர் ஒருவர் இது இன்றோடு நான் போடும் 50வது ட்வீட் தளபதி 64 படத்தின் ஆல்பம் எப்படி வந்துருக்கு பதில் சொல்லுங்கள் என்ற கேள்விக்கு , அனிரூத் நன்றாக வந்திருக்கிறது ப்ரோ நாங்கள் எக்சைடட் ஆக இருக்கிறோம் என்றும் கூறினார் .

தளபதி விஜயின் கத்தி படத்திற்கு அனிரூத் இசையமைத்து இருந்தார் .பாடல்கள் மற்றும் பின்னணி இசை அந்த படத்தில் மிக பெரிய வெற்றி அடைந்தது. அந்த படத்திற்கு பிறகு விஜயின் தளபதி 64 படத்திற்கு இசையமைத்து வருகிறார் அனிரூத். கத்தி ஆல்பம் பெரிய வெற்றி பெற்ற ஆல்பம் என்பதால் ரசிகர்கள் இதனை இன்னும் பெரிதாக எதிர்பார்த்து வருகின்றனர் .

vijay 64 music has come massive says aniruth

தற்போது தளபதி 64 படத்தில் தளபதி விஜயுடன் மாளவிகா மோகனன் ,விஜய் சேதுபதி, சாந்தனு ,ஆன்டனி வர்கீஸ் ,ஆன்ட்ரியா,சஞ்சீவ்,ஶ்ரீநாத்,ரம்யா சுப்ரமணியன்,கௌரி கிஷான்,சேத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். படத்திற்கு ஒளிப்பதிவு சத்யன் சூர்யன் செய்து வருகிறார் .படத்தொகுப்பை பிலோமின் ராஜ் செய்து வருகிறார்.

தளபதி விஜயின் கத்தி படத்திற்கு அனிரூத் இசையமைத்து இருந்தார் .பாடல்கள் மற்றும் பின்னனி இசை அந்த படத்தில் மிக பெரிய வெற்றி அடைந்தது. அந்த படத்திற்கு பிறகு விஜயின் தளபதி 64 படத்திற்கு இசையமைத்து வருகிறார் அனிரூத். கத்தி ஆல்பம் பெரிய வெற்றி பெற்ற ஆல்பம் என்பதால் ரசிகர்கள் இதனை இன்னும் பெரிதா எதிர்பார்த்து வருகின்றனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X