விஜய் 64 ஷூட்டிங்கே தினம் தினம் திருவிழா கோலாகலமாமே...!
சென்னை: தளபதி விஜய்யின் "விஜய் 64" படத்தின் படப்பிடிப்பே திருவிழா போல கோலாகலமாக நடக்க உள்ளதாம்.
படத்தின் கதை, இயக்குநர், தயாரிப்பாளர் எல்லாமே முடிவாகிவிட்ட நிலையில் இசையும் அனிருத் என்று முடிவாகி உள்ளது.

படத்தின் தயாரிப்பாளர் விஜயின் உறவினர் பிரிட்டோ என்பதால், அவருக்கு அவ்வளவாக திரைப்படத் தயாரிப்பில் அனுபவம் இல்லையாம்.
ஐஸ்வர்யா ராய் பற்றி சர்ச்சை மீம்ஸ் வெளியிட்ட விவகாரம்... மன்னிப்பு கோரினார் நடிகர் விவேக் ஓபராய்
எப்போதும் இவரது தயாரிப்பு படம் என்றால், விஜயின் அப்பா எஸ்ஏசி இதை எல்லாம் கவனித்து கொள்வாராம். ஆனால், இப்போது அது முடியாது என்பதால் விஜய் தனது மேனேஜரிடம் இந்த பொறுப்பை கொடுத்து இருக்கார் என்று சொல்கிறார்கள்.
படத்திற்கு இசை அனிருத் என்பதால் விஜய்க்காக படு லோக்கலாக களமிறங்கி தானே ஒரு பாடல் பாடவும் அனிருத் விஜய கேட்டுக்கொண்டதன் பேரில் திட்டமிட்டு இருப்பதாகவும் பேசிக்கறாங்க.
அது சரி படப்பிடிப்பே திருவிழா கோலாகலம் போல என்றோமே.. என்ன காரணம் தெரியுமா....தினம் தினம் படப்பிடிப்பில் 250 பேர் இருப்பாங்களாம். அந்த அளவுக்கு படத்தில் விஜய் சூப்பர் ஹீரோ என்று விஜய் வட்டார தகவல்கள் மூலம் தெரிய வந்திருக்கு.


Click it and Unblock the Notifications











