வெளியானது விஜய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.. படத்தின் பெயர் "மாஸ்டர்"! தெறிக்கவிடும் ரசிகர்கள்! #master

சென்னை: நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான படம் பிகில். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஓரளவுக்கு வசூலையும் குவித்தது.

பிகில் படம் தீபாவளிக்கு ரிலீஸான நிலையில் அன்றைய தினமே பிகிலுக்கு போட்டியாக வெளியான கார்த்தியின் கைதி படம் வரவேற்பு வசூல் என பிகிலை பின்னுக்கு தள்ளி பட்டையை கிளப்பியது.

விஜயின் 64வது படம்

விஜயின் 64வது படம்

இதனை தொடர்ந்து விஜயின் 64 வது படத்தை கைதி படத்தை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். கைதி படத்தின் ட்ரெயிலரை பார்த்தபோது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க விஜய் ஓகே சொன்னதாக பேசப்பட்டது.

வில்லன் விஜய் சேதுபதி

வில்லன் விஜய் சேதுபதி

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே டெல்லி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது. இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதியும், ஜோடியாக மாளவிகா மேனனும் நடிக்கின்றனர்.

சேவியர் பிரிட்டோ

சேவியர் பிரிட்டோ

இவர்களுடன் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், விஜே ரம்யா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.

மாஸ்டர்

மாஸ்டர்

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியிருக்கிறது. இதன் மூலம் படத்தின் பெயர் மாஸ்டர் என தெரியவந்ததுள்ளது.

விஜய் மட்டுமே உள்ளார்

விஜய் மட்டுமே உள்ளார்

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 3டி எஃபெக்ட்டில் உள்ள அந்த போஸ்டரில் விஜய் மட்டுமே தலையில் கை வைத்தப்படி இடம் பெற்றுள்ளார்.

காத்திருந்த ரசிகர்கள்

காத்திருந்த ரசிகர்கள்

இதுவரை படத்தின் பெயர் தெரியாததால் தளபதி 64 என குறிப்பிடப்பட்டு வந்தது. நேற்று முன்தினமே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் குறித்த தகவல் வெளியானதால், காலை முதலே #Thalapathy64FirstLook, #Thalapathy64FLday என்ற ஹேஷ்டேக்குகளுடன் கவுன்ட்டவுனை தொடங்கி காத்திருந்தனர் விஜய் ரசிகர்கள்.

ட்ரென்ட்டிங்கில் மாஸ்டர்

இந்நிலையில் படத்தின் போஸ்டர் வெளியாகியிருப்பதை தொடர்ந்து #Master என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள். #Master ஹேஷ்டேக் ட்ரென்ட்டிங்கில் டாப்பில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X