சிறப்பான சம்பவத்துக்கு காத்திருக்கும் விஜய் பட நாயகி... எதுக்குன்னு பாருங்க!
சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதற்காக ரசிகர்கள் மரண மாசாக வெயிட் செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் விஜய் 66 படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது.

விஜய்யின் பீஸ்ட்
நடிகர் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இந்தப் படம் வரும் 13ம் தேதி கோடைக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 இந்திய மொழிகளில் பான் இந்தியா படமாக இந்தப் படம் ரிலீசாக உள்ளது. இதற்காக ரசிகர்கள் மரண மாஸ் வெயிட்டிங்கில் உள்ளனர்.

சூப்பர் டூப்பர் ஹிட்டான பாடல்கள்
படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளது. கோடிக்கணக்கான வியூஸ் மற்றும் ஏராளமான லைக்ஸ்களை பெற்றுள்ளது. மாஸ்டர் படத்திற்கு பிறகு வெளியாகவுள்ள பீஸ்ட் படத்திற்கு ஏராளமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ரசிகர்கள் இப்போதே பீஸ்ட் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

ட்ரெயிலருக்கு சிறப்பு வரவேற்பு
படத்தின் பாடல்கள் மட்டுமின்றி ட்ரெயிலரும் ரசிகர்களின் மிகுந்த வரவேற்பிற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக ட்ரெயிலர் 50 மில்லியன் வியூஸ்களை நோக்கி சென்று வருகிறது. லட்சக்கணக்கான லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. பாடல்கள், ட்ரெயிலர் என்று பீஸ்ட் படம் கலைக்கட்டியுள்ளது.

பீஸ்ட் சாங் ரிலீஸ் பண்ணலாமா?
இந்தப் படத்தின் அரபிக்குத்து மற்றும் ஜாலிலோ ஜிம்கானா பாடல்கள் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ளது. இதையடுத்து படத்தின் மூன்றாவது பாடல் இன்றைய தினம் ரிலீசாக உள்ளதாக சன் பிக்சர்ஸ் மற்றும் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் நேற்றைய தினம் ட்விட்டர் பக்கங்களில் தெரிவித்திருந்தனர்.

காத்திருக்கும் ராஷ்மிகா
பீஸ்ட் சாங் ரிலீஸ் பண்ணலாமா என்று நேற்றைய தினம் அனிருத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேட்டிருந்தார். இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த ட்வீட்டிற்கு தான் காத்திருப்பதாக பதில் அளித்துள்ளார். மேலும் காதல் எமோஜியையும் அவர் இந்த ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.

விஜய்66 பட ஹீரோயின்
அடுத்ததாக வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் விஜய் தனது 66வது படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி சேர்ந்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் இந்தப் படத்தின் பூஜை படங்கள் இணையதளத்தில் ரிலீசாகி பட்டையை கிளப்பியது. விஜய் ரசிகர்கள் அடுத்த சம்பவத்திற்கு இப்போதே தயாராகி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











