கொல்கத்தா காளி கோவிலில் விஜய் - முருகதாஸ் பட பூஜை

By Mayura Akilan

சென்னை: 'ஜில்லா' படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் கொல்கத்தாவில் கொல்கத்தாவில் உள்ள காளிகாட் கோவிலில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

'துப்பாக்கி' படத்தின் மூலம், மாபெரும் வெற்றியைக் கொடுத்த விஜய் - முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணைகிறது. இது துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்று பேசப்பட்ட நிலையில் படம் முழுவதும் கொல்கத்தாவில் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

கொல்கத்தாவை சுற்றி...

கொல்கத்தாவை சுற்றி...

ஜில்லா படம் பொங்கலுக்கு ரிலீசாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் விஜய் இப்போது தன்னுடைய அடுத்த படத்திற்கான பூஜையை போட்டுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தின் கதை கொல்கத்தா நகரின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

விஜய் - சமந்தா

விஜய் - சமந்தா

கொல்கத்தாவை கலக்கிக்கொண்டிருந்த பிரபல கிரிமினல் வேடம்தான் விஜய்க்கு. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

கொல்கத்தா தாதா

கொல்கத்தா தாதா

மக்களுக்கு நன்மை செய்யும் கிரிமினலாக விஜய் ராபின் ஹூட்டாக வருகிறாராம். உண்மைக் கதையை தழுவி எடுக்கப்படும் இந்த படத்திற்கு இப்போதே பெருத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தீபாவளி ரிலீஸ்

தீபாவளி ரிலீஸ்

அனிருத் இசையமைப்பில் மதன்கார்க்கி பாடல்கள் எழுதுகிறார். பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கி தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளார்கள்.

மகிழ்ச்சியில் அனிருத்

மகிழ்ச்சியில் அனிருத்

முதன் முறையாக விஜய் படத்திற்கு இசையமைத்து இருப்பதால் மிகவும் சந்தோஷமாகி இருக்கிறார் அனிருத். விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணையும் படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். சந்தோஷமாக இருக்கிறது. பாடல்கள் அருமையாக வந்துள்ளன" என்று ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் அனிருத்.

விஜய் – முருகதாஸ் கூட்டணி

விஜய் – முருகதாஸ் கூட்டணி

ஏற்கெனவே விஜய்-முருகதாஸ் இணைந்த துப்பாக்கி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. துப்பாக்கி படத்தை மும்பை பின்னணியில் சொன்ன முருகதாஸ் இந்தப் படத்தை முழுவதும் கொல்கத்தா பின்னணியில் சொல்லப் போகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X