Vijay: “எனக்கு அரசியலே பிடிக்காது.. மாட்டிக்கினாரு ஒருத்தர்” ட்ரெண்டாகும் விஜய்யின் த்ரோபேக் வீடியோ
சென்னை: விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தது முதல் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். அரசியல் தான் தனது வேட்கை என அறிக்கை வெளியிட்டு செம்ம ஹைப் கொடுத்துள்ளார். இந்நிலையில் அரசியல் குறித்து விஜய் பேசிய த்ரோபேக் வீடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
எனக்கு அரசியலே பிடிக்காது
விஜய்யின் அரசியல் வருகை தமிழ்நாட்டு மக்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் முடிவும் அவரது அறிக்கையும் ஆதரவு, வரவேற்பு, எதிர்ப்பு, விமர்சனம் என பலவிதமான பார்வைகளைப் பெற்றுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்த விஜய், அரசியல் எனது வேட்கை என குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் பல ஆண்டுகளாக விஜய் தனது அரசியல் பயணம் குறித்து முடிவு செய்துள்ளது தெரிகிறது.

இந்நிலையில் அரசியல் குறித்து விஜய் பேசிய த்ரோபேக் வீடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். விஜய் நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியான திரைப்படம் தலைவா. ஏ.எல் விஜய் இயக்கிய இந்தப் படம் வெளியாவதில் பல பிரச்சினைகளை சந்தித்தன. தலைவா என்ற டைட்டில் காரணமாக தான் இந்தப் படத்துக்கு ஏராளமான சிக்கல்கள் வந்தன. அப்போதே விஜய் அரசியலுக்கு வருவார் என சொல்லப்பட்டது.
தலைவா திரைப்படம் வெளியான போது அதன் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் விஜய் கலந்துகொண்டார். அப்போது தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டிக் கொடுத்த விஜய்யிடம் “தலைவா திரைப்படம் நீங்க அரசியலுக்கு வருவீங்கன்னு சொல்லாம சொல்லுதா” என கேட்கப்பட்டது. இந்த கேள்வியை கேட்டதுமே சிரித்துவிட்ட விஜய், ”தலைவா படத்துலயும் அப்படி சொல்லல, நானும் அது உண்மைன்னு சொல்லல... நீங்க தான் இந்த மாதிரி சொல்லிட்டு இருக்கீங்க” என பதிலளித்துள்ளார்.
மேலும், இதுவரை நான் எங்குமே அரசியலுக்கு வருவேன் என சொன்னது கிடையாது, எனக்கு அதில் விருப்பமும் இல்லை. ஆனால், சில பத்திரிகைகளில் நான் அரசியலுக்கு வரவிருப்பதாக செய்திகள் வெளியானதை பார்த்தேன். அப்போது தான் எனக்கே அது தெரியவந்தது, அதாவது நான் அரசியலுக்கு வருவேன் என பலரும் பேசிக்கொள்வதை. ஆனால் அது தொடர்ந்து வருவதை பார்த்து, நானே அந்த செய்தியாளர்களை அழைத்து பேசி, இதுபோன்ற செய்திகள் எல்லாம் தேவையில்லை எனவும் கூறினேன்.
எனக்கு சினிமாவில் நடிப்பது மட்டுமே விருப்பம், அரசியலில் சுத்தமாக விருப்பமே கிடையாது.. மக்களின் கலைஞனாக எல்லோருக்கும் பொதுவான நடிகனாக இருக்க மட்டுமே ஆசை என விஜய் கூறியுள்ளார். தலைவா படம் வெளியான போது அரசியலில் ஆர்வமில்லை எனக் கூறிய விஜய், இப்போது ஏன் இப்படி மொத்தமாக மாறிவிட்டார் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். ஆனாலும் விஜய்யின் அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











