இது உங்களுக்காக மகேஷ் பாபு.. சவால்னு வந்துட்டா தளபதி விஜய்யை மிஞ்ச யாரு இருக்கா.. இது வேற லெவல்!
சென்னை: டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய், செடிகளை நடும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு, பிறந்தநாளை முன்னிட்டு நடிகர்கள் விஜய், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ஸ்ருதி ஹாசனுக்கு செடி நடும் சவாலை விடுத்திருந்தார்.
இந்நிலையில், தளபதி விஜய் அந்த சவாலை ஏற்று செடி நடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மகேஷ் பாபு சவால்
தனது பிறந்தநாளில் இதைத் தவிர வேறு என்ன நல்ல காரியத்தை செய்வது என ட்வீட் போட்டுள்ள மகேஷ் பாபு, #GreenIndiaChallenge என்ற ஹாஷ்டேக்கை பதிவிட்டு, தனது தோட்டத்தில் செடி நடும் வீடியோவை வெளியிட்டு இருந்தார். மேலும், நடிகர்கள் விஜய், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ஸ்ருதிஹாசனுக்கு அந்த சவாலை டேக் செய்திருந்தார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
மகேஷ் பாபு விடுத்துள்ள சவாலை ஏற்று தளபதி விஜய் வீடியோ வெளியிடுவாரா? தளபதி தரிசனமும் கிடைக்குமா? என ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்தனர்.. எப்போதுமே ரசிகர்கள் பக்கம் இருக்கும் நடிகர் விஜய், நிச்சயம் இந்த சவாலை ஏற்பார் என்றும் மகேஷ் பாபுவுக்கு இதற்காக நன்றி தெரிவித்தும், விஜய் ரசிகர்கள் மகேஷ் பாபுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இது உங்களுக்காக மகேஷ் பாபு
இந்நிலையில், தற்போது தளபதி விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் செடி நடும் புகைப்படங்களை பதிவிட்டு, இது உங்களுக்காக மகேஷ் பாபு காரு என பதிவிட்டு, தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார். ரசிகர்கள் எதிர்பார்க்காத நிலையில், தளபதி விஜய்யின் லேட்டஸ்ட் லுக் புகைப்படங்கள் வெளியான நிலையில், அதனை தளபதி ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

மகேஷ் பாபு நன்றி
ரொம்ப நன்றி பிரதர், இந்த பசுமை இந்தியா சவாலை முன்னெடுத்து சென்றதற்கு என நடிகர் மகேஷ் பாபு, உடனடியாக விஜய்க்கு பதில் போட்டுள்ளார். விஜய் ரசிகர்களும், மகேஷ் பாபு ரசிகர்களும் தளபதி விஜய்யின் போட்டோக்களை #Thalapathy என்ற ஹாஷ்டேக் போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தளபதி டிரெண்டிங்
தளபதி விஜய்யின் புகைப்படங்கள் ரசிகர்கள் எதிர்பார்க்காத நிலையில், திடீரென வெளியான நிலையில், விஜய் ரசிகர்கள் அதனை வேற லெவலில் #Thalapathy, #Master என்ற ஹாஷ்டேக்குகளை போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர். மீரா மிதுன் சர்ச்சையால் கடுப்பாகி இருந்த ரசிகர்கள், தளபதி விஜய்யின் புகைப்படங்களால் ஆறுதல் அடைந்து உற்சாகமாகி உள்ளனர். ஆகஸ்ட் 15ம் தேதி மாஸ்டர் பட பாடல் வீடியோவும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











