விஜய்யின் செயல் குரங்கு மாதிரி இருக்கு? பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வரிகளை பகிர்ந்து விளாசிய பிரபலம்
சென்னை: நடிகர் விஜய் - சங்கீதா விவாகரத்து பிரச்னை குறித்த பேச்சுக்கள் இணையதளத்தில் பெரும் பேசு பொருளாக உள்ளது. விஜய் மீது அவரது மனைவி வைத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் சங்கீதாவை மிகவும் மோசமாக எல்லாம் விமர்சித்தனர். இப்படி இருக்கையில் நடிகர் விஜய் நடிகை த்ரிஷாவுடன் இணைந்து திருமண விழாவுக்கு ஒன்றாக சென்றதும் பெரும் பேசு பொருளாக மாறியது.
இதனால் விஜய்க்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பேசியும் பதிவிட்டும் வந்த பலரும் விஜய்யின் இந்த செயலை கண்டித்தனர். இப்படி இருக்கையில் நடிகர் விஜய் தனது கட்சி சார்பில் மாமல்லபுரத்தில் நடத்திய மகளிர் தின கொண்டாட்டத்தில் தனது விவாகரத்து விவகாரம் தொடர்பாக பேசினார். அப்போது, " இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்னை குறித்து நீங்கள் போராடிக் கொண்டு இருக்குறீர்கள். சிலர் மனவேதனை அடைகிறீர்கள், அதைப் பார்த்தால் எனக்கு மனவேதனை ஆகிறது. அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்களும் நானும் சேர்ந்து மக்களின் பிரச்னையை மட்டும் பார்க்கலாம். அந்த அளவுக்கு வொர்த் இல்லை" என்று பேசினார்.

விஜய்யின் இந்த பேச்சுக்கு பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். குறிப்பாக விஜய் தனது மனைவி குறித்து இவ்வளவு தரம் தாழ்ந்த விமர்சனத்தை முன் வைத்திருக்க கூடாது என்றும், விஜய் ரசிகர்கள் சங்கீதாவை கடுமையாக விமர்சனம் செய்த போது விஜய் அதை ரசித்துக் கொண்டு இருந்தாரா என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
விளாசல்: இப்படி இருக்கையில் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், " அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு
அகந்தை குரங்கு தாவும். அதன்
அழகை குலைக்க மேவும்.
கொம்பு ஒடிந்து..கொடியும் குலைந்து..
குரங்கும் விழுந்து சாகும்.
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்" என்று குறிப்பிட்டு விஜய், சங்கீதா குறித்து வொர்த் இல்லை என்று விமர்சித்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இதற்கு ஒருவன் தன்னிடம் உள்ள அன்பையும், தன்னைச் சார்ந்தவர்களையும் மதிக்காமல் ஆணவத்தோடு செயல்பட்டால், அவன் எதை வைத்துப் பெருமை பேசினானோ அந்த ஆதாரமே அழிந்து, முடிவில் அவனும் அழிவான் என்பதுதான் பொருள்.

குறுக்கு வழியில்: மேலும் ப்ளூ சட்டை மாறன் பகிர்ந்துள்ள வரிகளானது, மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களால் எழுதப்பட்டவை. 1957 ஆம் ஆண்டு வெளிவந்த "மகாதேவி" என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற "குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா" என்ற புகழ்பெற்ற பாடலின் ஒரு பகுதி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











