Vijay: ”விஜய் அந்த மாதிரியான ஆளு... அவர் அப்படி பண்ண மாட்டார்..” சீனியர் நடிகரின் சில் மெமரீஸ்!

சென்னை: லியோ படத்தைத் தொடர்ந்து தளபதி 68ல் நடித்து வருகிறார் விஜய். முன்னதாக லியோ சக்சஸ் மீட்டில் கலந்துகொண்ட விஜய், ரசிகர்கள் முன் ஜாலியாக பேசி வைப் கொடுத்திருந்தார்.

ஆனால், விஜய் எப்போதும் எங்கேயும் அதிகம் பேசமாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. இதுகுறித்து விஜய்யுடன் பல படங்களில் நடித்துள்ள நடிகர் சார்லி சில சுவாரஸ்யங்களை பகிர்ந்துள்ளார்.

Vijay: Actor Charlie opens up about his experience of acting with Vijay

விஜய்க்கு சர்டிஃபிகேட் கொடுத்த சார்லி
விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் 600 கோடி வரை வசூலித்தது. நெகட்டிவான ட்ரோல்கள், கலவையான விமர்சனம் என பல தடைகளை தாண்டி இப்போதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனிடையே பிரம்மாண்டமாக நடைபெற்ற லியோ சக்சஸ் மீட்டில், விஜய் குட்டி ஸ்டோரி சொல்லி வைப் கொடுத்தார்.

பொதுவாகவே விஜய் எந்த மேடையிலும் அதிகம் பேச மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த சில ஆண்டுகளாக தான், தனது படங்களின் இசை வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் பஞ்ச் கொடுத்து வருகிறார். குறிப்பாக லியோ சக்சஸ் மீட்டில் விஜய் பேசியதும், அவர் சொன்ன குட்டி கதையும் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே வைரலானது. இந்நிலையில், விஜய் குறித்து பிரபல நடிகர் சார்லி மனம் திறந்துள்ளார்.

500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சார்லி, தமிழ் சினிமாவின் சீனியர் நடிகர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. காமெடி, குணச்சித்திரம் என பலவிதமான கேரக்டர்களில் நடித்துள்ளார். விஜய்யின் ஆரம்பகால படங்களில் அவரது நண்பராக நடித்துள்ளார். முக்கியமாக விஜய்க்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்த பூவே உனக்காக படத்தில், சார்லி தான் விஜய்யின் நண்பராக நடித்திருப்பார்.

அதேபோல், காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, நிலாவே வா, ஒன்ஸ்மோர், ப்ரெண்ட்ஸ் போன்ற படங்களிலும் விஜய்யுடன் நடித்துள்ளார். இந்தப் படங்களில் நடிக்கும் போது விஜய்க்கும் சார்லிக்கும் இடையே நல்ல நட்பு இருந்ததாம். இதுபற்றி தனது சமீபத்திய பேட்டியில் நெகிழ்ச்சியாக பேசியுள்ள சார்லி, விஜய்யின் பக்குவத்தைப் பார்த்து தான் ஆச்சரியப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

அதாவது தேவையில்லாத இடங்களில் பணம் செலவு செய்யக் கூடாது. அதேபோல், வார்த்தைகளை விடுவதிலும் அதிக கவனம் வேண்டும். இதில் விஜய் ரொம்பவே தெளிவாக இருப்பார். எந்த இடத்திலும் எது மாதிரியான எமோஷனலான நேரங்களிலும் விஜய்யிடம் இருந்து வார்த்தைகள் வந்துவிடாது. ரொம்பவே பக்குவமாக பேசுவதில் விஜய்யை பார்த்து நான் பலமுறை வியந்துள்ளதாக சார்லி ஓபனாக தெரிவித்துள்ளார். சார்லியின் இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X