Vijay: விஜய் கூட அப்படிலாம் நடிக்க முடியாது... தெறித்து ஓடிய 90ஸ் பிரபலம்... இதுதான் காரணமா?
சென்னை: கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸாகிறது.
இந்நிலையில், விஜய்யுடன் நடிக்க மறுத்த 90ஸ் பிரபலம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் - அட்லீ காம்போவில் முதன்முறையாக உருவான தெறி படத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
விஜய்யுடன் நடிக்க மறுத்த பிரபலம்:விஜய்யின் குட்புக்கில் இருப்பவர் இயக்குநர் அட்லீ. ராஜா ராணி திரைப்படம் இயக்குநரான அட்லீ, தனது இரண்டாவது படத்திலேயே விஜய்யுடன் கூட்டணி வைத்தார். அதன்படி விஜய் - அட்லீ கூட்டணியில் முதன்முறையாக உருவான தெறி 2016ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் விஜய் செம்ம மாஸ்ஸான போலீஸ் ஆபிஸர், க்யூட்டான அப்பா என நடித்திருந்தார்.

விஜய் ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோரும் மீனாவின் மகள் நைனிகா, ராதிகா, இயக்குநர் மகேந்திரன், பிரபு உள்ளிட்ட பலரும் லீடிங் ரோலில் நடித்திருந்தனர். விஜய் கேரியரில் தெறி சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்தே விஜய் - அட்லீ கூட்டணியில் மெர்சல், பிகில் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகின. இந்நிலையில் தெறி படத்தில் விஜய்க்கு வில்லனாக இயக்குநர் மகேந்திரன் நடித்திருந்தார்.
1980களில் முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே உட்பட தரமான படங்களை இயக்கியுள்ள மகேந்திரன், தெறி படத்தில் தான் வில்லனாக முகம் காட்டினார். வானமாமலை என்ற மகேந்திரனின் வில்லன் கேரக்டர் செம்ம பவர்ஃபுல்லாக இருந்தது. ஆனால், இந்த ரோலில் நடிக்க முதலில் நடிகர் மோகனிடம் தான் கேட்டுள்ளார் அட்லீ. 90களில் வெள்ளிவிழா நாயகனாக வலம் வந்தவர் மோகன்.
வெள்ளிவிழா நாயகன், மைக் மோகன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அவர், 90களுக்குப் பிறகு ஃபீல்ட் அவுட்டாக இருந்தார். ஆனாலும், அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால், விஜய்க்கு வில்லனாக மோகனை களமிறக்க நினைத்துள்ளார் அட்லீ. ஆனால், விஜய்க்கு வில்லனாக நடிக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டாராம் மோகன். நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அட்லீயிடம் நேரடியாகவே கூறிவிட்டாராம்.
அதன்பின்னரே மோகனுக்குப் பதிலாக இயக்குநர் மகேந்திரனிடம் பேசியுள்ளார் அட்லீ. முன்னணி இயக்குநர் என்ற எந்த ஈகோவும் இல்லாமல் அவரும் விஜய்க்கு வில்லனாக நடித்து மாஸ் காட்டினார். அதேநேரம், மோகனும் ஹரா திரைப்படம் மூலம் மீண்டும் ஹீரோவாகவே நடிக்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. விஜய்யுடன் இணைந்து நடிக்க பல முன்னணி நடிகர்களே ரெடியாக இருக்கும் போது தேடி வந்த நல்ல வாய்ப்பை மோகன் மிஸ் செய்துவிட்டாரே என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











