Vijay: அரசியல் கனவில் விஜய்... க்ரீன் சிக்னல் கொடுத்த ஷங்கர்... உருவாகிறதா முதல்வன் 2..?

சென்னை: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68ல் நடிக்கவுள்ளார் விஜய்.

இந்நிலையில் விஜய் - இயக்குநர் ஷங்கர் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 Vijay: Actor Vijay and Director Shankar are set to reunite for Mudhalvan 2

அதன்படி பொலிட்டிக்கல் ஜானரில் உருவாகும் இப்படம் முதல் 2ம் பாகமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

விஜய் - ஷங்கர் கூட்டணியில் முதல்வன் 2:லியோ படத்தை முடித்துவிட்ட விஜய், அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68ல் நடிக்கவுள்ளார். லியோ படத்தின் ஷூட்டிங் முடிந்தாலும் அதில் டப்பிங் பணிகளை முடித்துவிட்டு தான் தளபதி 68ல் நடிக்கவிருக்கிறாராம் விஜய். அதன்படி இப்படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக விஜய் நடிக்கவுள்ள தளபதி 69 படத்தை அட்லீ இயக்குவார் என சொல்லப்பட்டது. ஆனால், தற்போது அந்த ரேஸில் அட்லீயின் குரு ஷங்கரும் இணைந்துள்ளாராம். அதாவது தளபதி 69 அல்லது தளபதி 70 இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை ஷங்கர் இயக்குவார் எனக் கூறப்படுகிறது. விஜய்யின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகரிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக வேலை பார்த்தவர் ஷங்கர்.

தற்போது கோலிவுட்டின் பிரம்மாண்டமான இயக்குநராக வலம் வரும் அவர், விஜய்யுடன் நண்பன் படத்தில் மட்டும் இணைந்தார். 3 இடியட்ஸ் என்ற இந்தி படத்தின் ரீமேக்காக தான் நண்பன் உருவானது. ஆனாலும், இது ஷங்கரின் மேஜிக்கல் மூவி கிடையாது என விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். அதனால், இந்தக் கூட்டணி 12 ஆண்டுகளுக்குப் பிறகு செம்ம மாஸ்ஸாக ரீ-என்ட்ரி கொடுக்க பிளான் செய்துள்ளார்களாம்.

சமீபத்தில் விஜய்யை சந்தித்த ஷங்கர், பொலிட்டிக்கல் ஜானரில் ஒரு ஒன்லைன் ஸ்டோரி கூறியுள்ளார். இதில் இம்ப்ரஸ்ஸான விஜய், இந்த கதையில் நடிக்க தயார் என சம்மதம் தெரிவித்துவிட்டாராம். இதனால் உற்சாகமான ஷங்கர், கேம் சேஞ்சர், இந்தியன் 2 படங்கள் வெளியானதும் இதற்கான திரைக்கதையை ரெடி செய்துவிடுவதாக விஜய்யிடம் கூறியுள்ளாராம். அதனால் விஜய் - ஷங்கர் கூட்டணி இணைவது உறுதியாகியுள்ளது.

 Vijay: Actor Vijay and Director Shankar are set to reunite for Mudhalvan 2

முக்கியமாக விஜய் - ஷங்கர் இணையும் இந்தப் படம் முதல்வன் 2ம் பாகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்து 1999ம் ஆண்டு வெளியான முதல்வன் சூப்பர் ஹிட்டானது. சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக ஷங்கர் எழுதிய இந்த கதையில் அர்ஜுன் ஹீரோவாக நடித்திருந்தார். ஒருநாள் முதல்வர் என்ற அரசியல் பின்னணி படமான முதல்வன் உருவானது. அந்நேரம் ரஜினி அரசியலில் அடிக்கடி வாய்ஸ் கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது விஜய்யும் அரசியல் குறித்து பேசி வருவதுடன், அதற்கான மூவ் எடுத்து வருவதை பார்க்க முடிகிறது. நேற்று தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை அவசரமாக சந்தித்திருந்தார் விஜய். சமீபத்தில் கூட மாணவர்களை சந்தித்த விஜய், அவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கிய போது அங்கேயும் அரசியல் பேசினார். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது விஜய் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் படம் 'முதல்வன் 2ம் பாகமாக' இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜய் - ஷங்கர் கூட்டணி குறித்து அபிஸியல் அப்டேட் இப்போதைக்கு வெளியாக வாய்ப்பில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X