Vijay: என்னது விஜய் லண்டன் போகலையா... அஜித், த்ரிஷா ரூட்டுல இப்படியொரு முடிவா..?

ஒஸ்லோ: லியோ படத்தில் நடித்து வந்த விஜய் விரைவில் தளபதி 68ல் இணையவுள்ளார்.

அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ள லியோ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் லோகேஷ் பிஸியாகிவிட்டார். இதனிடையே விஜய் லண்டன் சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தன.

 Vijay: Actor Vijay has gone to Norway instead of London

ஆனால், விஜய் உண்மையாகவே லண்டன் செல்லவில்லை என்றும், தற்போது எங்கிருக்கிறார் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் இப்போது எங்கே இருக்கிறார்..?
வாரிசு படத்தைத் தொடர்ந்து லியோவில் கமிட்டானார் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் காஷ்மீரில் தொடங்கிய லியோ படப்பிடிப்பு கடந்த மாதமே முடிவுக்கு வந்தது. மொத்தமே 125 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்ட லோகேஷ், தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன், ப்ரொமோஷன் வேலைகளில் பிஸியாகிவிட்டார். இதனிடையே லியோ இசை வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

அதன்படி லியோ இசை வெளியீட்டு விழா முதலில் சென்னை, திருச்சி, மதுரை அல்லது கோவை என எதாவது ஒரு நகரில் நடக்கும் என சொல்லப்பட்டது. ஆனால், அதன்பின்னர் துபாயில் நடக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகின. இப்போது அதுவும் இல்லையென்றும், மலேஷியாவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், லியோ வெளியாகும் முன்பே, அதாவது செப்டம்பரில் தளபதி 68 படத்துக்கான பூஜை விழா சென்னையில் நடைபெறுகிறதாம். மேலும், இப்படத்தில் விஜய் ஜோடியாக ஜோதிகா நடிக்கவிருப்பதும் உறுதியாகியுள்ளதாம். செப்டம்பரில் தளபதி 68 பூஜை நடைபெறுவதால், விஜய்யும் அதில் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது. அதற்குள்ளாக அவர் வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்புவார் என சொல்லப்படுகிறது.

 Vijay: Actor Vijay has gone to Norway instead of London

ஆனால், விஜய் லண்டன் சென்றுள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை என தற்போது தெரியவந்துள்ளது. வழக்கமாக லண்டன் சென்று மனைவி சங்கீதாவின் வீட்டில் ஓய்வெடுக்கும் விஜய், இந்தமுறை நார்வே சென்றுவிட்டாராம். லண்டன் என சொல்லிவிட்டு சைலண்டாக நார்வே சென்றது ஏன் என ரசிகர்களே குழப்பத்தில் உள்ளனர். அதேநேரம் அஜித்தும் பைக் ட்ரிப் அடிக்க நார்வே சென்றுள்ளார். அதேபோல், நடிகை த்ரிஷாவும் நார்வே சென்றுள்ளதாக தனது இன்ஸ்டாவில் போட்டோ ஷேர் செய்திருந்தார்.

கோலிவுட்டின் மிக முக்கியமான பிரபலங்களான விஜய், அஜித், த்ரிஷா மூவருமே நார்வேவில் இருப்பது ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. இதனையறிந்த ரசிகர்கள், விஜய், அஜித், த்ரிஷா மூவரும் நார்வேயில் சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்கும் என விவாதமே செய்யத் தொடங்கிவிட்டனர். ஆனாலும், விஜய் நார்வேயில் தான் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து அவரது தரப்பில் இருந்து அறிவிக்கப்படவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X