Vijay: தளபதி 68-க்குப் பின் சினிமாவில் இருந்து ஓய்வா..? விஜய் தரப்பில் இருந்து வந்த அவசர மெசேஜ்!

சென்னை: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் நிறைவு பெறும் என சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் தளபதி 68 படப்பிடிப்பில் விஜய் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்நிலையில், தளபதி 68க்குப் பின்னர் விஜய் சினிமாவில் இருந்து 3 ஆண்டுகள் ஓய்வுபெறுவதாக வெளியான செய்திக்கு அவரது தரப்பில் இருந்து மெசேஜ் வெளியாகியுள்ளது.

 Vijay: Actor Vijay has not left the cinema after Thalapathy 68

விஜய்யிடம் இருந்து வந்த அவசர மெசேஜ்: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் லியோ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதனிடையே விஜய் பிறந்தநாளில் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்தது.

இன்னொரு பக்கம் மாணவர்களை திரட்டி அவர்களுக்கு பரிசளித்த விஜய், தனது அரசியல் பயணம் குறித்தும் பொடி வைத்து பேசியிருந்தார். இதனால், 2026 தேர்தலில் விஜய் களமிறங்குவார் என சொல்லப்பட்டது. அதற்கான வேலைகளை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இதுகுறித்து விஜய் தரப்பில் இருந்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், லியோ படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68ல் நடிக்கவுள்ளார் விஜய். இப்படத்தின் அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல், தளபதி 68 படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. குறைந்த நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க வேண்டும் எனவும் விஜய் கூறியுள்ளாராம்.

இதற்கெல்லாம் காரணம் விஜய் அரசியலில் களமிறங்க அதிக ஆர்வத்துடன் இருப்பது தான் என சொல்லப்படுகிறது. அதனால், தளபதி 68 படப்பிடிப்பு முடித்ததும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு சினிமாவில் நடிக்கப் போறதில்லை என விஜய் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனால் விஜய் ரசிகர்கள் உட்பட திரையுலகிலும் பெரும் பரபரப்பு காணப்பட்டது. ஆனால், இதுகுறித்து விஜய் தரப்பில் இருந்து அவசரமாக மெசேஜ் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, விஜய் சினிமாவில் இருந்து விலகவில்லை எனவும், தளபதி 68 படத்திற்குப் பின்னரும் தொடர்ந்து படங்களில் நடிப்பார் எனவும் கூறப்படுகிறது. இதனால் விஜய் சினிமாவில் இருந்து விலகுவதாக வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்தியே என உறுதியாகியுள்ளது. அதேநேரம் அரசியலில் களமிறங்கும் முடிவில் இருந்தும் விஜய் பின்வாங்கவில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X