Vijay: 234 தொகுதிகளில் மாணவர்களை சந்திக்கும் விஜய்... அரசியல் பிரவேசம் தொடங்கியதா?

சென்னை: விஜய் தற்போது லோகேஷ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடிக்கவும் கமிட்டாகியுள்ளார்.

இன்னொரு பக்கம் அடிக்கடி தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து வருகிறார் விஜய்.

இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களை சந்திக்கவும் விஜய் திட்டமிட்டுள்ளாராம்.

விஜய்யின் அரசியல் பிரவேசம் ஆரம்பம்:இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக விஜய்யின் வாரிசு திரைப்படம் வெளியானது. வாரிசு வெளியானதுமே லியோ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் விஜய். எப்போதும் வெளிநாடு சென்று ரெஸ்ட் எடுத்துவிட்டு அதன் பின்னர் புதிய படத்தில் நடிப்பதே விஜய்யின் வழக்கம். ஆனால், வாரிசு, லியோ என அடுத்தடுத்து வேகம் காட்டி வருகிறார்.

 Vijay: Actor Vijay is planning to meet students in 234 constituencies

அதேபோல், லியோ வெளியானதுமே தளபதி 68 ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இன்னொரு பக்கம் அடிக்கடி தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை நேரில் சந்தித்து வருகிறார் விஜய். அதேபோல், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் பல்வேறு சமூகப் பணிகளில் பங்கெடுத்து வருகின்றனர். இதனால், விஜய் அரசியலில் களமிறங்குகிறாரா என்ற கேள்வி எழுந்தது.

தற்போது அதனை உறுதி செய்யும் வகையில் விஜய்யின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் உள்ளன. சமீபத்தில் தான் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகின. அவர்களில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியர்களை அரசியல் கட்சி பிரமுகர்களும், பல்துறை பிரபலங்களும் பாராட்டி அன்பளிப்புகள் கொடுத்தனர். அதேபோல், விஜய்யும் தற்போது மாணவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளாராம்.

அதன்படி, 234 தொகுதிகளில் 1500 மாணவ, மாணவியர்களை ஜூன் இரண்டாவது வாரத்தில் சந்திக்கவிருக்கிறாராம் விஜய். 10ம் வகுப்பு, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களையும், பெற்றோர் இல்லாமல் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களையும் விஜய் சந்திக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்டம்தோறும் உள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் செய்து வருகிறார்களாம்.

இதனால், விஜய் அரசியலில் களமிறங்குகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடலாம் எனவும் அதற்கான முன்னோட்டமாக மாணவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இதுகுறித்து இன்னும் விஜய் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X