Vijay: ”விஜய்க்கு நான் தோழி கிடையாது... ஆனா அதெல்லாம் மிஸ் பண்ணுவேன்.." பிரபல இளம் நடிகை ஓபன்!

சென்னை: கோட் படத்தில் நடித்து வரும் விஜய், விரைவில் அரசியலில் களமிறங்குகிறார். அதன்படி கடைசியாக இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவுள்ளார். இதனையடுத்து விஜய்யின் அரசியல் பயணத்துக்கு திரையுலகினர் உள்ளிட்ட பல பிரபலங்கள் வழ்த்துத் தெரிவித்துள்ளனர். சில விமர்சனங்களும் எழுந்த நிலையில், பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸும் மனம் திறந்துள்ளார்.

விஜய்க்கு நான் தோழி கிடையாது

விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் பிஸியாக இருக்கிறார். இன்னொரு பக்கம் தனது அரசியல் கட்சியை அறிவித்துவிட்டு அதற்கான வேலைகளிலும் தீயாக வேலை செய்து வருகிறார். கோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக வலம் வந்த விஜய், இனி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக மக்களை சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 Vijay Actress Aparna Das opens up about Vijays political entry


கடந்த வாரம் தனது கட்சியின் பெயரை அறிவித்த விஜய், இனி சினிமாவில் இருந்து விலகி அரசியலில் பயணிக்கவுள்ளதாக தெரிவித்தார். அதன்படி, கோட், தளபதி 69 படங்களுக்குப் பின்னர் முழுநேர அரசியல்வாதியாக வலம் வரவுள்ளார் விஜய். இதனையடுத்து விஜய்யின் அரசியல் பயணம் வெற்றிப் பெற வேண்டும் என திரை பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர். அதேபோல் விஜய்யின் அரசியல் வருகை குறித்து ஏராளமான விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில், விஜய்யின் அரசியல் பயணம் குறித்து நடிகை அபர்ணா தாஸ் மனம் திறந்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் 2022ம் ஆண்டு வெளியானது. இதில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தாலும், அபர்ணா தாஸும் லீடிங் ரோலில் நடித்திருந்தார். பீஸ்ட் வெற்றியை தொடர்ந்து கவினின் டாடா படத்தில் நாயாகியாக நடித்திருந்தார் அபர்ணா தாஸ். மலையாள நடிகையாக இருந்தாலும் அபர்ணா தாஸுக்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

அவரிடம் விஜய் அரசியல் களமிறங்கியது குறித்து கேட்கப்பட்டது. ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம், நீங்கள் விஜய்யின் தோழியா என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அபர்ணா தாஸ், “நான் விஜய்க்கு தோழி எல்லாம் கிடையாது... அவருடைய தீவிரமான ரசிகை... எனக்கு அவரை ரொம்பவே பிடிக்கும்..” எனக் கூறினார். பின்னர் விஜய்யின் அரசியல் கட்சி குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு “விஜய் சார் அரசியலுக்கு வருவதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி தான். ஆனால் இனி அவர் சினிமாவில் நடிக்க மாட்டேன் என சொன்னதால், அவரது படங்களை முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதை மிஸ் செய்வேன்..” என ரசிகையாக பதிலளித்துள்ளார். விஜய் பற்றியும் அவரது அரசியல் பயணம் குறித்தும் அபர்ணா தாஸ் ஓபனாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X