Vijay: "விஜய் கூட பிகினில நடிச்சா கூட எனக்கு Comfort தான்..” வசீகரா பட நடிகையின் ஓபன் ஸ்டேட்மெண்ட்!

சென்னை: விஜய் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள லியோ படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 30ம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விஜய்யுடன் பிகினியில் நடித்தால் கூட எனக்கு ஓக்கே தான் என வசீகரா பட நடிகை ஓபனாக பேசியுள்ளார்.

மேலும், விஜய் பற்றிய தனது கருத்துகளை வெளிப்படையாக பேசியது, ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

 Vijay: Actress Gayatri Jayaraman opens up about her experience of acting with Vijay

விஜய் கூட பிகினில நடித்தாலும் ஓக்கே: கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான விஜய், தற்போது லியோ படத்தில் நடித்துள்ளார். லியோ வெளியானதும் வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். இந்நிலையில், லியோ படத்தின் செகண்ட் சிங்கிள், இசை வெளியீட்டு விழா போன்ற அப்டேட்கள் எப்போது வரும் என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துள்ளனர்.

இதனிடையே விஜய் பற்றி வசீகரா பட நடிகை காயத்ரி ஜெயராமன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. தமிழில் பிரபுதேவா ஹீரோவாக நடித்த மனதை திருடிவிட்டாய் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் காயத்ரி ஜெயராமன். முதல் படத்திலேயே மஞ்சக்காட்டு மைனாவாக ஆட்டம் போட்டு ரசிகர்களை வசீகரித்தார் காயத்ரி ஜெயராமன். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், விஜய்யின் வசீகரா படங்களில் நடித்தார்.

அதன்பின்னர், மலையாளம், தெலுங்கில் ஒருசில படங்களில் மட்டுமே நடித்த காயத்ரி ஜெயராமனுக்கு பெரிதாக சான்ஸ் கிடைக்கவில்லை. இதனால், தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய்யுடன் வசீகரா படத்தில் நடித்தது குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார் காயத்ரி ஜெயராமன். தமிழ் சினிமாவில் ஹீரோவாக இருக்கும் பல நடிகர்கள், நடிகைகளை தொந்தரவு செய்யாமல் இருப்பதில்லை. ஆனால், விஜய்யுடன் நடிக்கும் போது முழுமையான பாதுகாப்பு இருக்கும் என்றுள்ளார்.

 Vijay: Actress Gayatri Jayaraman opens up about her experience of acting with Vijay

மேலும், நடிகைகளை விஜய் பார்ப்பதாக இருக்கட்டும், அவரது பார்வை என எதுவுமே நமக்கு தவறாக தெரியாது. விஜய் முன்னால் பிகினியில் நடித்தால் கூட அங்கே எனக்கு பாதுகாப்பு இருக்கும் எனக் கூறியுள்ளார். நான் இதுவரை நடித்த பல ஹீரோக்கள் வெளிப்படையாக சொல்லாமல் இருந்தாலும், அவர்களது பார்வையில் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். ஆனால், விஜய் இதில் மிஸ்டர் கிளீன் என சர்டிபிகேட் கொடுத்துள்ளார் காயத்ரி ஜெயராமன்.

விஜய் பற்றி காயத்ரி ஜெயராமன் பெருமையாக பேசியது, ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது. பொதுவாகவே விஜய் எப்போதும் படப்பிடிப்பில் தேவையில்லாமல் சீன் கிரியேட் செய்யமாட்டார். ஸ்பாட்டுக்கு சென்றால் நடித்துவிட்டு அவர் கிளம்பிவிடுவார் என பலரும் அவருடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது காயத்ரி ஜெயராமனும் விஜய்யை பயங்கரமாக புகழ்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X