தளபதி 64: பட பூஜையுடன் தொடங்கியது - காலேஜ் புரொபசராக நடிக்கும் விஜய்
Recommended Video
சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் 64அவது திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இத்திரைப்படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராகவும், சாந்தனு கல்லூரி மாணவராகவும் நடிக்கவிருக்கின்றனர். ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் எடுத்து முடித்து, அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிடலாம் என்று படக்குழு திட்டமிட்டுள்ளது.
விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும், அட்லியின் இயக்கத்தில் உருவான பிகில் திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து, வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கிறது.

தளபதி விஜய் நடிக்க வந்த புதிதில் குறும்புத்தனமாக நடித்து வெளிவந்த செந்தூரப்பாண்டி, தேவா, ரசிகன் ஆகிய மூன்று படங்களை தயாரித்தவர் சேவியர் பிரிட்டோ. தற்போது நான்காவது முறையாக XB பிலிம் கிரியேட்டர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தளபதி விஜய்யின் 64ஆவது படத்தை தயாரிக்கிறார்.
இந்தப் படத்தை மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். ராக்ஸ்டார் அனிருத், கத்தி திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக தளபதி விஜயுடன் இணைந்து இப்படத்திற்கு இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணியை கவனிக்கிறார்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதன்முறையாக மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த பியாண்ட் தி க்ளவுட்ஸ் என்ற படத்திலும், ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்திலும் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இத்திரைப்படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராகவும், சாந்தனு கல்லூரி மாணவராகவும் நடிக்கப்போகின்றனர். பிகில் படத்தில் மாணவிகளுக்கு ஃபுட்பால் கோச்சாக நடித்த விஜய், தனது 64அவது படத்தில் கல்லூரி பேராசிரியராக நடிக்கவிருப்பது, அவரது ரசிகர்களை புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.
அடுத்தடுத்து இளய தலைமுறையை குறிவைத்து படத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதை பார்க்கும்போது, தளபதி விஜய் ஏதோ முடிவெடுத்துவிட்டதாகவே அவரது ரசிகர்கள் நினைக்கின்றனர். 64ஆவது படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் எடுத்து முடித்து, அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிடலாம் என்று படக்குழு திட்டமிட்டுள்ளது.
விஜய்யின் 64ஆவது படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. முதல் கட்டமாக ஒரு சண்டைக்காட்சி ஒன்றை படமாக்க படக்குழு முடிவெடுத்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











