Don't Miss!
- News
5 நாட்களில் 13,000 பேர் பலி.. சீனாவில் கோராத்தாண்டவமாடும் கொரோனா.. பலி மேலும் அதிகரிக்குமாம்
- Automobiles
விலை இவ்வளவு கம்மி தானா! ஆரா ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்திய ஹூண்டாய்!
- Technology
Vijay Sales Mega Republic Day sale: ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவிகளை கம்மி விலையில் வாங்க இதுதான் சரியான நேரம்.!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வினோதமான காரணத்துக்காக காதலிப்பாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Sports
"3 தனித்தனி அணிகள்.. ஆனாலும் ஒரு சிக்கல்".. பிசிசிஐ திட்டம் குறித்து கபில் தேவ் அறிவுரை.. அடேங்கப்பா
- Finance
இது மட்டும் நடந்துட்டா..? மாத சம்பளக்காரர்களுக்குப் பெரும் கொண்டாட்டம் தான்..!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
இந்த பக்கம் கீர்த்தி சுரேஷ்.. அந்த பக்கம் பிரியங்கா மோகன்.. கொடுத்து வச்சவரு விஜய் அட்மின்!
சென்னை: வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் என்னோட அட்மின் என நடிகர் விஜய் அறிமுகப்படுத்தி வைத்த ஜெகதீஷ் பிளிஸ் உடன் நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியங்கா மோகன் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களும் வீடியோக்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
தி ரூட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ஜெகதீஷ் பிளிஸ் நடிகர் விஜய்யின் அட்மினாக செயல்பட்டு வருகிறார்.
தீ ரூட் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியங்கா மோகன் இருவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர்
தில்
ராஜுக்கு
விடிவி
கணேஷ்
கற்றுக்
கொடுத்த
பாடம்..
வாரிசு
சக்சஸ்
மீட்டில்
கலகலப்பு!

விஜய் அட்மின்
வாரிசு படத்தின் ஆடியோ லாஞ்சில் ட்வீட் எல்லாம் எனக்கு போடத் தெரியாது என் அட்மினை கூப்பிடுறேன் என விஜய் அழைக்க உடனடியாக ஓடி வந்து விஜய்யின் அந்த செல்ஃபி வீடியோவை ட்வீட் செய்தார் ஜெகதீஷ். இந்நிலையில், அவருடன் நடிகைகள் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதிகம் பரவி வருகின்றன.

பொங்கல் வைத்த கீர்த்தி சுரேஷ்
மாமன்னன் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக ரகு தாத்தா மற்றும் ரிவால்வர் ரீட்டா என வித்தியாசமான தலைப்புகளில் உருவாகி வரும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தி ரூட் சார்பில் நடத்தப்பட்ட பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அவர் வணங்கிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கீர்த்தி சுரேஷ் ரசிகர்களின் லைக்குகளை அள்ளி உள்ளன.

வரும்போதே கட்டிப்பிடித்து
அந்த பொங்கல் விழாவுக்கு நடிகை பிரியங்கா மோகன் வரும் போதே ஜெகதீஷ் ப்ளிஸ்ஸை கட்டிப் பிடித்து மரியாதை செலுத்தும் விதமாக சிரித்த முகத்துடன் உள்ளே வந்த காட்சிகளை பார்த்த பிரியங்கா மோகன் ரொம்பவே வயிற்றெரிச்சலுடன் கிண்டலாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்த பக்கம் கீர்த்தி அந்த பக்கம் பிரியங்கா
மேலும், அந்த பொங்கல் விழாவில் ஜெகதிஷ் நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியங்கா மோகன் இருவருக்கும் நடுவே எடுத்துக் கொண்ட போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் மனுஷன் வாழுறான்யா என்றும் விஜய் அட்மினாக மாற என்ன procedure என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

வயிறு எரியுது
வெளியே நல்லா இருடா.. என சொல்லும் நான் உண்மையிலேயே உள்ளுக்குள் வயிறு எரிந்து கொண்டே இந்த போட்டோவை பார்க்கிறேன் என விஜய் ரசிகர்களே ஜெகதீஷ் ப்ளிஸ் நடிகைகள் பிரியங்கா மோகன் மற்றும் கீர்த்தி சுரேஷ் உடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடியதை பார்த்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

தளபதி 67 அப்டேட்
இயக்குநர் வம்சி மற்றும் வாரிசு படக்குழுவினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் 4ல் தொடங்கிய இந்த பயணம் இன்று வெற்றி விழாவில் இனிதே நிறைவடைந்துள்ளது என ஜெகதீஷ் பதிவிட்டதை பார்த்து ஹாப்பியான ரசிகர்கள் அடுத்து தளபதி 67 அப்டேட்டை சீக்கிரம் போட்டு விடுங்க அட்மின் என கமெண்ட் பக்கத்தில் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு தளபதி 67 அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.