என்ன மனுஷங்க அவரு..: அஜீத்தை பற்றி மோகன்ராஜாவிடம் கூறிய விஜய்

By Siva

சென்னை: அஜீத் பற்றி விஜய் தன்னிடம் கூறியதை இயக்குனர் மோகன்ராஜா தெரிவித்துள்ளார்.

அஜீத்தும், விஜய்யும் நிஜத்தில் நண்பர்கள் தான். இது தெரியாமல் தல, தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தினமும் மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களின் சண்டைக்காகவே ஹேஷ்டேக் உருவாக்கி ட்விட்டரில் டிரெண்டாக விடுகிறார்கள்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

அஜீத்தும், விஜய்யும் நல்ல நண்பர்கள், நம்புங்கப்பா என்று எத்தனை முறை கூறினாலும் அதை நம்ப தல, தளபதி ரசிகர்கள் தயாராக இல்லை. அவர்கள் நட்பு பாராட்டிக் கொண்டிருக்க ரசிகர்களோ மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

விஜய்

விஜய்

மங்காத்தா ஷூட்டிங் நடந்தபோது தான் விஜய் வேலாயுதம் படத்தில் நடித்தார். அப்போது அஜீத் கொடுத்த பிரியாணி விருந்தில் வேலாயுதம் டீம் கலந்து கொண்டது.

மோகன்ராஜா

மோகன்ராஜா

பிரியாணி விருந்தில் கலந்து கொண்டபோது நடந்த விஷயம் பற்றி வேலாயுதம் இயக்குனர் மோகன்ராஜா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். விருந்தில் கலந்து கொண்ட விஜய் என்ன மனுஷங்க அவரு, செம அழகாக இருக்காருல என்று அஜீத்தை பற்றி மோகன்ராஜாவிடம் கூறியுள்ளார்.

திருந்த வேண்டும்

திருந்த வேண்டும்

தல, தளபதி ரசிகர்களுக்கு யாரும் அறிவுரை வழங்கத் தேவையில்லை. அவர்களாக திருந்தினால் தான் உண்டு. தற்போது கூட ஒரு படத்தின் வசூல் குறித்து தல, தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X