»   »  இதுக்கு எல்லாம் அழலாமா ப்ரோ: சிவகார்த்திகேயனுக்கு விஜய் அட்வைஸ்?

இதுக்கு எல்லாம் அழலாமா ப்ரோ: சிவகார்த்திகேயனுக்கு விஜய் அட்வைஸ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விழா மேடையில் அழுத சிவகார்த்திகேயனுக்கு போன் செய்து ஆறுதல் கூறியுள்ளாராம் இளைய தளபதி விஜய்.

ரெமோ சக்சஸ் மீட்டில் சிவகார்த்திகேயன் அழுதாலும் அழுதார் திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அதை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

Vijay advises Sivakarthikeyan?

சிவா அழுதவுடன் முதல் ஆளாக அவருக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்தவர் சிம்பு. இந்நிலையில் இளைய தளபதி விஜய் சிவகார்த்திகேயனுக்கு போன் செய்து ஆறுதல் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரச்சனைகளை பார்த்து அழக் கூடாது என்று விஜய் சிவாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளாராம். முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினியும் சிவாவுக்கு போனில் ஆறுதல் கூறினார்.

Vijay advises Sivakarthikeyan?

இந்நிலையில் சிவாவை போன்று தாங்களும் மிரட்டப்பட்டதாக விஷாலும், சிம்புவும் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Buzz is that Vijay called Sivakarthikeyan over phone and advised him not to cry while facing problems.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil