Don't Miss!
- News
கனமழை எச்சரிக்கை.. திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. வருவாய் அலுவலர் அறிவிப்பு!
- Lifestyle
ஆண்களே! உங்க திருமண உறவை மகிழ்ச்சியாக வைத்திருக்க... நீங்க இந்த விஷயம் பண்ணா போதுமாம்...!
- Finance
பைஜூவில் 15% ஊழியர்கள் பணி நீக்கம்.. ஏன் தெரியுமா.. யாருக்கெல்லாம் பாதிப்பு..!
- Automobiles
முன்ன மாதிரியில்ல ஹோண்டா வாகனங்கள் மீது நம்பிக்கை இழக்கும் மக்கள்... கிடுகிடுவென சரியும் விற்பனை!
- Sports
ஹர்திக் கொடுத்த பலே ஐடியா.. சதத்திற்கு நீங்க தான் காரணம்.. ஹர்திக் குறித்து சுப்மன் கில் பேச்சு
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கெடா மீசை.. கையில் காப்பு.. கருப்பு சட்டையில் கலக்கலாக ரசிகர்களை சந்தித்த விஜய்!
சென்னை: பனையூரில் இன்று மீண்டும் ரசிகர்களையும் ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் விஜய் சந்தித்துள்ள புகைப்படங்கள் தற்போது தீயாக பரவி வருகிறது.
கடந்த மாதம் பனையூரில் பிரியாணி விருந்தளித்து ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி இருந்தார் நடிகர் விஜய்.
இன்றும் மீண்டும் விடுபட்ட சில மாவட்ட நிர்வாகிகளை சந்திக்க விஜய் வருகிறார் என்று தெரிந்ததும் அவரை காண ஏகப்பட்ட ரசிகர்கள் அங்கே கூடினர்.
முதன்முறையாக
இணையும்
ஜிவி
பிரகாஷ்
குமார்
-
ஐஸ்வர்யா
ராஜேஷ்..
என்ன
விஷயம்
தெரியுமா?

மீண்டும் பிரியாணி விருந்து
பனையூரில் இன்று மீண்டும் தடபுடலாக பிரியாணி விருந்து ரெடியாகிறது என காலையிலேயே தகவல்கள் வெளியானது. அதை தொடர்ந்து சென்னையில் உள்ள ரசிகர்கள் அப்படியே பைக் எடுத்துக் கொண்டு கூட்டம் கூட்டமாக பனையூருக்கு கிளம்பி சென்றனர். இந்நிலையில், விஜய் ரசிகர்களை சந்தித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

வாரிசு படத்துக்காக
துணிவு படத்திற்கு பயந்து வாரிசு படத்தை ப்ரமோட் செய்யவே விஜய் இதுபோன்ற சந்திப்புகளை திடீரென செய்து வருகிறார் என ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்டோர் ட்ரோல் செய்துள்ளனர். ஆனால், விஜய் இப்படி அடிக்கடி ரசிகர்களையும் விஜய் மக்கள் இயக்க மன்ற நிர்வாகிகளையும் சந்திப்பது வழக்கம் என விஜய் ரசிகர்கள் விளக்கம் கொடுத்தனர்.

கருப்பு சட்டையில் விஜய்
போன மாசம் நடந்த சந்திப்பின் போது வெள்ளை சட்டையில் நடிகர் விஜய் கலந்து கொண்டதை பார்த்து அவர் அரசியலுக்கு வரப் போகிறாரா? என கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், இன்றைய சந்திப்பின் போது கருப்பு சட்டை அணிந்து செம ஸ்டைலாக இன் பண்ணிக் கொண்டு வந்த போட்டோக்கள் தற்போது டிரெண்டாகி வருகின்றன.

தளபதி 67 லுக்
வாரிசு படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு ரெடியாகி உள்ள நிலையில், அடுத்ததாக தளபதி 67 படத்தை பூஜை போட்டு ஆரம்பித்து விட்டார் விஜய். இந்நிலையில், கெடா மீசை, லாங் ஹேர் மற்றும் கையில் காப்புடன் விஜய் தளபதி 67 லுக்கில் ரசிகர்களை சந்தித்தது ஒட்டுமொத்த ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது.

திணறும் டிரெண்டிங்
விஜய்யின் லேட்டஸ்ட் போட்டோக்கள் வெளியான நிலையில், மீண்டும் ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் விஜய் ஹாஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன. வரும் பொங்கலுக்கு வாரிசு படத்தையும் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு தளபதி 67 படத்தையும் கொடுக்க விஜய் ரெடியாகி விட்டார் என ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை எகிற விட்டு வருகின்றனர்.