Vijay Ajith: அரசியலுக்கு வரும் விஜய்... ஆனால் அஜித்தை கொண்டாடும் ரசிகர்கள்... எதுக்குன்னு தெரியுமா?

சென்னை: கோட் படத்தில் நடித்து வரும் விஜய், விரைவில் அரசியலில் களமிறங்குகிறார். விஜய்யின் கடைசிப் படமாக தளபதி 69 உருவாகவுள்ளது. அதன் பின்னர் முழுமையாக அரசியலில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். விஜய் அரசியலில் களமிறங்க முடிவு செய்துள்ள நிலையில், அஜித்தை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருவது கவனம் ஈர்த்துள்ளது.

அஜித்தை கொண்டாடும் ரசிகர்கள்

கோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக வலம் வரும் விஜய், இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளார். சில வருடங்களாகவே விஜய் அரசியலில் களமிறங்கலாம் என செய்திகள் வெளியாகின. அதனால் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அவரது ரசிகர்கள் பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே விஜய்யும் ஓய்வே இல்லாமல் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார்.

 Vijay Ajith: Ajith Fans are celebrating as for Vijay is entering politics

தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வரும் விஜய், இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளாராம். அதன்படி தளபதி 69 முடிந்ததும் உடனடியாக தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என தனது அரசியல் கட்சியின் பெயருடன் நேற்று விஜய் அறிக்கை வெளியிட்டார். அதில், இனி அரசியல் தான் தனது பாதை என்பதை தெளிவாகக் கூறிவிட்டார்.

இதனையடுத்து விஜய்க்கு அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர். இன்னொரு பக்கம் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து ஏராளமான ட்ரோல்களும் வைரலாகி வருகின்றன. விஜய் சினிமாவில் இருந்து விலகுவது கோலிவுட் பாக்ஸ் ஆபிஸிலும் பெரிய வெற்றிடம் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய்யின் அரசியல் முடிவால் அஜித்துக்கு ரசிகர்களிடம் பாராட்டு கிடைத்து வருகிறது.

அதாவது விஜய் சினிமாவில் இருந்து விலகிய பின்னர் அரசியலில் களமிறங்கினாலும், அவருக்கு பெரிய அடையாளம் கொடுத்தது திரைப்படங்கள் தான். அதன் மூலம் தான் விஜய்க்கு பெரியளவில் ரசிகர்கள் உள்ளனர். அதேபோல் தான் அஜித்தும், தமிழில் அதிக ரசிகர்கள் உள்ள ஹீரோக்களில் அவரும் முக்கியமானவர். எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல் ஜோடிக்கு அடுத்தபடியாக விஜய் - அஜித் தான் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் நம்பர் 3 என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இருவரது படங்களும் ஒரேநாளில் வெளியானால் யார் பாக்ஸ் ஆபிஸ் கிங் என ரசிகர்களிடம் பெரிய போட்டியே காணப்படும். இந்நிலையில் தனது சினிமா வளர்ச்சியை பயன்படுத்தி விஜய் அரசியலுக்கு வருவதை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் அஜித் தான் ரியல் ஜென்டில்மேன், சினிமாவை தொழிலாக மட்டுமே பார்க்கும் அஜித், அதற்காக தனது ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டார். ஆனால் விஜய் அப்படியில்லாமல் அரசியலில் களமிறங்குவது சரிதானா எனவும் விமர்சித்துள்ளனர்.

அதேபோல், விஜய்யும் அஜித்தும் தங்களது படங்களின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கிடையாது. விஜய் கூட இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார், ஆனால் அஜித் அதிலும் கலந்துகொள்வது கிடையாது. இதனை குறிப்பிட்டுள்ள ரசிகர்கள், தனது படத்துக்காக தனிப்பட்ட ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத விஜய், அரசியலுக்கு வந்தால் மக்களுக்காக எப்படி களத்தில் இறங்கி வேலை பார்ப்பார் என்றும் விமர்சித்து வருகின்றனர். ஆனாலும் விஜய்யின் அரசியல் பயணம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X