ரஜினியின் மூன்று முகம் ரீமேக்: விஜய், அஜீத், கார்த்தி யார் ஹீரோ?

By Mayura Akilan

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன மூன்றுமுகம் திரைப்படம் ரீமேக் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. இந்தப்படம் தற்போது மீண்டும் ரீமேக் செய்யப்பட உள்ளது.

புதிய மூன்றுமுகம் படத்தில் அஜீத், விஜய், கார்த்தி ஆகிய மூவரில் யார் நடிக்கப் போகிறார்கள் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

1982ல் ரஜினி மூன்று வேடங்களில் நடித்து, வெற்றிகரமாக ஓடிய படம் மூன்று முகம்.

ஆர்.எம்.வீரப்பனின் 'சத்யா மூவீஸ்' நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஜெகநாதன் இயக்கிய இந்தப் படம் ரஜினிக்கு ஒரு பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது என்று சொல்லலாம்.

நேர்மையான போலீஸ்

நேர்மையான போலீஸ்

இதில் நேர்மையான போலீஸ் ஆக அலெக்ஸ்பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ரஜினி.

ரஜினிக்கு விருது

ரஜினிக்கு விருது

ரஜினி, ராதிகா, செந்தாமரை உள்ளிட்ட பலர் நடிக்க ஜெகன்நாதன் இயக்கிய படம் 'மூன்று முகம்'. 1982-ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்தது. அந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதை ரஜினிகாந்த்திற்கு பெற்று தந்தது.

ரசிகர்களிடம் வரவேற்பு

ரசிகர்களிடம் வரவேற்பு

இப்படத்தில் ரஜினியின் நடிப்பும், வசன உச்சரிப்பும் தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாது. மூன்று வேடத்தில் ரஜினி நடித்த இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் இந்தியில் ரஜினிகாந்த் நடிக்க ரீமேக் செய்யப்பட்டது.

மீண்டும் மூன்றுமுகம்

மீண்டும் மூன்றுமுகம்

இந்நிலையில் மூன்று முகம் விரைவில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்தப் படத்தை ரீ-மேக் செய்கிறார் ‘குரூப் கம்பெனி' கதிரேசன். இதற்கான பிரத்தியேக உரிமத்தை சத்யா மூவி நிறுவனத்திடமிருந்து பெற்றிருக்கிறார்.

கனவு நனவான மகிழ்ச்சி

கனவு நனவான மகிழ்ச்சி

"ரஜினி சாரின் படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்ற கனவு நனவாகி இருக்கிறது என்று தயாரிப்பாளர் கதிரேசன் கூறியுள்ளார்.

மாஸ் ஹீரோ

மாஸ் ஹீரோ

மூன்று முகம்' ஒரு மாஸ் ஹீரோவிற்கான படம். அஜித், விஜய், கார்த்தி போன்ற பெரிய நடிகர்களுக்கு தான் பொருத்தமாக இருக்கும் என்றும் கதிரேசன் கூறியுள்ளார்.

போலீஸ் கெட்அப்

போலீஸ் கெட்அப்

அஜீத், விஜய், கார்த்தி ஆகிய மூவரும் போலீஸ் வேடத்தில் நடித்து ஏற்கனவே மக்களிடமும், ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளனர்.

ரஜினி படத்தில் அஜீத்

ரஜினி படத்தில் அஜீத்

ஏற்கனவே ரஜினி நடித்த பில்லா படத்தில் அஜீத் நடித்துள்ளார். அந்தப் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

கார்த்தி – விஜய்

கார்த்தி – விஜய்

மூன்றுமுகம் ரீமேக்கில் தங்களின் ஃபேவரைட் ஹீரோ நடிக்கவேண்டும் என்றும் கார்த்தி, விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

யாருக்கு அதிர்ஷ்டம்

யாருக்கு அதிர்ஷ்டம்

அலெக்ஸ்பாண்டியனாக அரிதாரம் பூச யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ தெரியவில்லை. சினிமா ரசிகர்களே நீங்களே சொல்லுங்கள் யாருக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X