»   »  ரஜினியைப் பார்த்து கத்துக்குங்க விஜய், அஜித்!

ரஜினியைப் பார்த்து கத்துக்குங்க விஜய், அஜித்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்றைய சூழலில் ஒரு படத்துக்கு பப்ளிசிட்டி என்பது ரொம்ப்ப்ப்ப்பவே முக்கியம். எனவேதான் தங்களுடைய ஆடியோ ரிலீஸ், ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஆகியவைகளை பிரபலங்களை வைத்து நடத்த எல்லோரும் ஆசைப்படுகிறார்கள்.

இதனை நன்கு உணர்ந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் இருக்கும் இடத்துக்கும் உயரத்துக்கும் எவ்வளவோ பந்தா பண்ணலாம். ஆனால் சின்ன படமாக இருந்தாலும் கூட தன்னை அணுகுபவர்களுக்கு புரொமோஷனில் உதவி செய்கிறார். சின்னப் படங்களைப் பார்த்துவிட்டு மனசார பாராட்டுகிறார். வீட்டுக்கே அழைத்து சிம்பிளாக ஆடியோ ரிலீஸ் செய்து, பெரிய அளவில் சிறு தயாரிப்பாளர்கள், வளரும் நடிகர்களுக்கு உதவுகிறார்.

Vijay and Ajith to learn a lot from Rajinikanth

கமல் ஹாஸனும் கூட இதை சில நேரங்களில் ஃபாலோ செய்கிறார். தனக்கு மிகவும் நெருங்கியவர்களுக்கு மட்டும் ரிலீஸ் செய்து தருகிறார்.

ஆனால் விஜய்யும் அஜித்தும் தங்களை யாரையும் நெருங்க விடுவதில்லை. எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்று மற்றவர்களுக்கு உதவுவதில்லை. அட, அவர்கள் இருக்கும் இடத்தைக் கூட சினிமாக்காரர்களாலேயே தெரிந்து கொள்ள முடிவதில்லை. இதனால் திரையுலகினர் இருவர் மீதும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

'அவங்க, அவங்க நடிச்ச படத்து பப்ளிசிட்டிக்கே உதவி பண்ண மாட்டாங்க... இதுல அடுத்தவனுக்கு எப்படி உதவி பண்ணுவாங்க?' என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

English summary
Tamil film industry is feeling bad about Vijay and Ajith as they never help small films or producers in publicity.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil