கலைஞர் 100 விழாவை கண்டு கொள்ளாத விஜய், அஜித்... ஏமாந்த ரசிகர்கள்.. காரணம் என்ன?
சென்னை: கலைஞர் மு கருணாநிதியின் நூற்றாண்டு விழா நேற்று சென்னை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதற்காக அந்த இடமே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. இதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், சூர்யா, கார்த்திக், நயன்தாரா கலந்து கொண்டனர். ஆனால், விஜய், அஜித், சிம்பு, சிவகார்த்திகேயன் கலந்து கொள்ளாததால் அவரை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வந்தது. அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் கலைஞர் 100 விழா பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம். சார்பில் கலைஞர் 100 விழாவை கடந்த மாதம் 24ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது.

கலைஞர் 100 விழா: ஆனால், மிக்ஜம் புயல் மற்றும் கனமழை காரணமாக நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்தது. இதையடுத்து, கலைஞர் 100 விழா நேற்று சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், கௌதமி, நடிகர் சிவராஜ் குமார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் வடிவேலு, பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர் வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், நடிகை ரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ரஜினிகாந்த் மாஸ் பேச்சு: இதில் பேசிய ரஜினிகாந்த், ஸ்டாலினை எனக்கு 1974ம் ஆண்டில் இருந்தே நன்றாக தெரியும். அப்பவே அவர் அனைத்து பொதுக்கூட்டங்களில் இருக்குறதை நான் பார்த்து இருக்கிறேன். 9 மணிக்கு மேல கலைஞரோட பையன்னு சொல்லி ஸ்டாலினைப் பேச அழைப்பார்கள். அப்போதில் இருந்த அதே பேச்சு அவர் கிட்ட இப்பவும் இருக்கு. கடினமா உழைச்சு அவர் இப்ப இந்த இவ்ளோ உயர்ந்து முதல்வரா ஆகியிருக்காரு. அதேபோல கலைஞர் அவர்கள் 1955 ஆண்டு சினிமாவுக்கு வசனம் எழுதி வாங்குன கோபாலபுரம் வீட்லதான் கடைசி வரைக்கும் இருந்தாரு. அந்த வீட்ல எதையுமே மாற்றல. ரொம்ப எளிமையா வாழ்ந்துட்டு போனாரு என்று கலைஞரை புகழ்ந்து பேசினார்.
ரசிகர்கள் ஏமாற்றம்: மேலும், இந்த விழாவில் கமல், சூர்யா, தனுஷ், பார்த்திபன் என பலரும்கலைஞரை நினைவு கூர்ந்து பேசினார்கள். ஆனால், இந்த விழாவில் அஜித், விஜய், சிம்பு, விக்ரம், விஷால் என யாருமே கலந்து கொள்ளவில்லை. முக்கியமான இந்த விழாவிற்கு இவர்கள் நிச்சயம் வருவார்கள் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர்கள் வராததால் ஏமாற்றத்துடன் சென்றனர். நடிகர் அஜித் விடா முயற்சி படப்பிடிப்புக்காக அசர்பைஜான் நாட்டில் உள்ளார். இதேபோன்று வெளிநாட்டில் புத்தாண்டை கொண்டாடச் சென்ற விஷால், சிம்பு, விக்ரம் உள்ளிட்டோரும் வெளிநாட்டில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











