Vijay Ajith: ‘நண்பேன்டா’ வைப் கொடுத்த விஜய்-அஜித்... இவங்கள இப்படிப் பார்த்து எவ்ளோ நாளாச்சு..?

சென்னை: விஜய்யின் லியோ ட்ரெய்லர் நேற்று முன்தினம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

முன்னதாக கடந்த 4ம் தேதி அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியது.

கோலிவுட்டின் இருதுருவங்கள் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் விஜய்யும் அஜித்தும் உண்மையாகவே நெருங்கிய நண்பர்கள் என்பது பலரும் அறியாதது.

இந்நிலையில், விஜய் - அஜித் இருவரும் ஒருவரை கட்டிப்பிடித்தபடி செம்ம பாஸிட்டிவ் வைப் கொடுக்கும் போஸ்டர் வைரலாகி வருகிறது.

 Vijay Ajith: Vijay with Ajith fan fan-made poster is trending now

நண்பேன்டா வைப் கொடுத்த விஜய் - அஜித்: கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் ரஜினி - கமலுக்குப் பின்னர், விஜய் - அஜித் இருவரும் தான் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் உள்ளனர். ஒரே காலக்கட்டத்தில் தங்களது கேரியரை தொடங்கிய விஜய்யும் அஜித்தும், இன்று கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களாக விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றனர். ஆரம்ப காலத்தில் இருவரும் இணைந்து ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் நடித்திருந்தனர்.

அதன்பின்னர் இருவரும் 'நேருக்கு நேர்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. ஆனால், விஜய்யும் அஜித்தும் தங்களுக்கு என தனி பாதையை உருவாக்கிக்கொண்டனர். இருவரது படங்களும் ஒரே தேதியில் ரிலீஸானால், அங்கே ரசிகர்களின் கொண்டாட்டத்துக்கும் மோதலுக்கும் அளவே கிடையாது. தல - தளபதி என எதிரும் புதிருமாக ரசிகர்கள் அவர்களுக்கு ஹைப் கொடுத்து பார்த்தனர்.

 Vijay Ajith: Vijay with Ajith fan fan-made poster is trending now

ஆனால், இதையெல்லாம் கடந்து விஜய், அஜித் இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா தொடர்பான அல்லது பொதுநிகழ்ச்சிகள் என எங்குப் பார்த்தாலும் இருவருமே பரஸ்பரம் கைகுலுக்கி பேசிக்கொள்வதும் அரட்டை அடிப்பதும் வழக்கம். சமீபத்தில் கூட அஜித்தின் தந்தை உயிரிழந்ததை அறிந்த விஜய், உடனடியாக வீடு தேடிச் சென்று ஆறுதல் கூறினார். சினிமாவில் இருக்கும் போட்டி நிஜ வாழ்க்கையையும் நட்பையும் பாதிக்காத வகையில் பார்த்துக்கொண்டனர்.

கடைசியாக விஜய் - அஜித் இருவரும் இந்தாண்டு பொங்கல் ரிலீஸில் மோதிக்கொண்டனர். அதன்படி 2023 பொங்கலில் வெளியான அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு இரண்டுமே சூப்பர் ஹிட் அடித்தன. இதனையடுத்து விஜய்யின் லியோ இந்த மாதம் 19ம் தேதி வெளியாகிறது. ஆனால், அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் இப்போதுதான் தொடங்கியுள்ளது.

 Vijay Ajith: Vijay with Ajith fan fan-made poster is trending now

இந்நிலையில், விஜய்யும் அஜித்தும் இணைந்து ரசிகர்களுக்கு வைப் கொடுத்த போஸ்டர் செம்மையாக வைரலாகி வருகிறது. விஜய்யை அஜித் பின்னால் இருந்து அணைத்துக்கொள்வதாகவும், இருவரும் ஒருவரையொருவர் வாஞ்சையுடன் கட்டிப்பிடித்துக் கொள்வதுமாக இந்த போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இவையனைத்தும் ரசிகர்களால் கிரியேட் செய்யப்பட்ட ஃபேன்மேட் போஸ்டர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இந்த போஸ்டர்கள் செம்ம வைப் கொடுப்பதாக விஜய், அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X