twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த நேரத்திலும் வாய் திறக்காத விஜய், அஜித், விக்ரம்.. மக்கள் மேல அவ்வளவுதான் அக்கறையா?

    |

    சென்னை: கொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்கு கூட சில பிரபல நடிகர்கள் வாய் திறக்காமல் இருப்பது, அவரது ரசிகர்களை மட்டுமின்றி பொதுமக்களையும் அதிருப்தி கொள்ள செய்துள்ளது.

    Recommended Video

    Actor Sivakarthikeyen Humanity 10 lac to FEFSI workers

    கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக தனது வீட்டையே நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையாக்க ரெடியாகி விட்டார்.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, பிரகாஷ் ராஜ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலர் FEFSI தொழிளார்களுக்கு உதவும் வகையில் பல லட்சங்களை நிதியாக கொடுத்து வருகின்றனர்.

    பார்த்திபன், சாந்தனு, வரலக்‌ஷ்மி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோக்களை பதிவிட்டும், சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டும் வருகின்றனர்.

    ஆனால், கோலிவுட்டின் டாப் நடிகர்களான விஜய், அஜித், விக்ரம், சிம்பு, நயன்தாரா உள்ளிட்ட சில நடிகர்கள் எந்தவொரு அக்கறையும் இந்த விஷயத்தில் காட்டுவதாக தெரியவில்லை.

    விஜய் வாய்ஸ் தரலாமே

    விஜய் வாய்ஸ் தரலாமே

    ஜல்லிக்கட்டு, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல விஷயங்களில் பொதுமக்களுக்காக தானாகவே முன்வந்து நடிகர் விஜய் தனது அழுத்தமான கருத்துக்களை வெளியிட்டு இருந்தார். ஆனால், உலகையே நடுங்க வைத்து வரும் கொரோனா வைரஸ் பற்றி ஏன் நடிகர் விஜய் எந்தவொரு வாய்ஸும் கொடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், FEFSI தொழிலாளர்களுக்கும் எந்தவொரு பண உதவி செய்ததாகவும் தகவல் இல்லை.

    பேசுங்க அஜித்

    பேசுங்க அஜித்

    தல - தளபதிக்குத் தான் தமிழ்நாட்டில் அதிகளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லை என்றாலும், இதுபோன்ற அசாதாரணமான சூழலில், ஒரு விழிப்புணர்வு வீடியோவை உருவாக்கி நடிகர் அஜித் வெளியிட்டால், அது பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு விழிப்புணர்வாக அமையும். சினிமா தொழிலாளர்களின் நலனுக்காகவும் நிதி உதவி செய்வது இந்த தருணத்தில் அவசியமான ஒன்று.

    சைலன்ட் ஆன சியான்

    சைலன்ட் ஆன சியான்

    கோப்ரா படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் நடிகர் விக்ரம், பொன்னியின் செல்வன் ஷூட்டிங் இன்றி வீட்டில் தான் ஓய்வெடுத்து வருகிறார். மூத்த நடிகர்கள் முதல் நேற்று நடிக்க வந்தவர்கள் வரை விழிப்புணர்வு வீடியோக்களையும், FEFSI தொழிலாளர்களுக்கு தங்களால் இயன்ற உதவியையும் செய்து வரும் நிலையில், சியான் விக்ரம் சைலன்ட்டாக இருப்பது நல்லதல்ல.

    சீக்கிரம் சிம்பு

    சீக்கிரம் சிம்பு

    நடிகர் தனுஷ் தொடர்ந்து கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும், FEFSI தொழிலாளர்களுக்காக 15 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார். ஆனால், சிம்புவோ மாநாடு ஷூட்டிங் நடக்காத சோகத்தில் மூழ்கி விட்டாரா என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். பொதுமக்களை வீட்டில் இருங்க வெளியே வராதீர்கள் என்றாவது சீக்கிரமாக சொல்லலாமே சிம்பு.

    கைதட்டுனா மட்டும் போதுமா

    கைதட்டுனா மட்டும் போதுமா

    ஞாயிற்றுக் கிழமை அன்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதன் பேரில், நடிகை நயன்தாரா மாலை 5 மணிக்கு கைதட்டிய புகைப்படத்தை அவரது காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். ஆனால், கொரோனா வைரஸ் பாதிக்காமல், மக்கள் வீடுகளிலேயே பத்திரமாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை கூட ஏற்படுத்தாமல் நயன்தாரா போன்ற முக்கிய பிரபலங்களுக்கு நேரம் இல்லையா? இல்லை சமூக பொறுப்பு இல்லையா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

    சொன்னா கேட்பாங்க

    சொன்னா கேட்பாங்க

    நாடு முழுவதும் லாக் டவுன் போடப்பட்டிருந்தாலும், இன்னும் பல இடங்களில் மக்கள் விழிப்புணர்வு இல்லாமல், வெளியே சுற்றுவதும், போலீஸார் கெஞ்சி கேட்பதும், லத்தி சார்ஜ் செய்வதுமாக இருக்கிறது. இப்போதாவது, நீங்கள் வாய் திறந்து மக்களுக்கும், டிக்கெட் வாங்கி உங்க படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் நல்லா இருக்கும்.

    English summary
    Vijay, Ajith, Vikram, Simbu, Nayanthara remains silent and not interested in spreading Corona Awareness and do the needful help to FEFSI employees.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X