»   »  இணையத்தைக் கலக்கிய 'தலைவா' ஜோடி.. வைரலான வீடியோ

இணையத்தைக் கலக்கிய 'தலைவா' ஜோடி.. வைரலான வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய், அமலாபால் இணைந்து நடித்த விளம்பரமொன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

படங்கள் தவிர விஜய் விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக விஜய்யின் ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரங்கள் மிகவும் பிரசித்தமானவை.

இந்நிலையில் நடிகை அமலாபாலுடன் இணைந்து விஜய் நடித்த ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரம், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமண நாளன்று மனைவிக்கு போன் செய்யும் விஜய் அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்காமல் வைத்து விடுகிறார்.

தொடர்ந்து மனைவிக்கு அவர் எப்படி சர்ப்ரைஸ் கொடுக்கிறார் என்பதே விளம்பரம். 40 நொடிகள் விளம்பரத்தில் வித்தியாசமான ஹேர் ஸ்டைல்+ திருமணக் கோலம் என்று விஜய் அசத்துகிறார்.

நேற்று இணையத்தில் வெளியான இந்த விளம்பரத்தை 1 லட்சத்திற்கும் அதிகமான பேர் இதுவரை பார்த்து ரசித்துள்ளனர்.

மேலும் அன்லிமிடெட் லைக்ஸ்களையும் விளம்பரம் குவித்து வருகிறது. விஜய்- அமலாபால் இருவரும் 'தலைவா' படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Vijay & Amala Paul Josalukkas Advertisement Goes Viral on Internet.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil