என்னங்கடா விஜய், ஐஸ்வர்யா ராயை வச்சு படமே எடுத்துடுவீங்க போல.. ஜன நாயகன் பிறகும் ஏஐ வச்சு விஜய் படம்?

சென்னை: ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் புகைப்படங்களை ஒன்றாக சேர்த்து உருவாக்கி வரும் நிலையில், சில விநாடி வீடியோக்களும் உருவாகி வருகின்றன. இந்நிலையில், விஜய், ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்தது போல ஒரு ஏஐ பாடலையே உருவாக்கியுள்ளனர்.

நடிகை சமந்தாவின் திருமணத்தில் ராம்சரண் கலந்துக் கொண்டு செல்ஃபி எடுப்பது போன்ற ஏஐ போட்டோக்களை ரசிக்க முடிகிறது. அதே நேரத்தில் சமந்தாவின் முதலிரவு என பிகினி உடையில் அவர் சேலைகளை அவிழ்த்து இருப்பது போன்ற வக்கிரம் பிடித்த ஏஐ எடிட் போட்டோக்களும் வைரலாகி வருகின்றன.

Vijay and Aishwarya Rai Ai video song getting mixed comments
Photo Credit:

விஜய், அஜித்தை மெய்யழகன் படத்தில் வரும் அரவிந்த்சாமி, கார்த்தி போல மாற்றியும் விஜய்யை எப்படியாவது தமிழ்நாடு முதலமைச்சராக மாற்றி விட வேண்டும் என ஏஐ மூலம் விஜயகாந்த் அரசன் பட சிம்பு போல வந்து பேசும் வீடியோக்கள் எல்லாம் வைரலாகி வருகின்றன.

நன்மையும் தீமையும்: நெருப்பை வைத்து கார்த்திகை தீபத்துக்கு விளக்கையும் ஏற்ற முடியும், கூரை வீட்டையும் கொளுத்த முடியும் என்பது போல ஏஐ எனும் நெருப்பை வைத்து நன்மையும் தீமையும் என சமூகத்தில் அதிகமான விஷயங்கள் உருவாகத் தொடங்கியுள்ளன. கையில் அடிபட்டு காயம் வந்தது போல ஏஐ உதவியுடன் வேலையில் ஏமாற்றி விடுப்பு எடுக்கும் ஊழியர்கள், டீப் ஃபேக் போட்டோக்களை உருவாக்கி நடிகைகளை அச்சுறுத்தும் நபர்கள் என ஒரு பக்கம் நெகட்டிவ் விஷயங்கள் ஏஐ மூலமாக தீயாக பரவி வரும் நிலையில், நமக்குப் பிடித்த நடிகர்கள், நடிகைகள், நடக்காத காம்பினேஷன் ரோலக்ஸ் கெட்டப்பில் அஜித் குமார் என ஏஐ கிரியேட்டிவ்களும் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றன.

விஜய், ஐஸ்வர்யா ராய் பாடல்: ரசிகர் ஒருவர் தனது ஏஐ திறமையை பயன்படுத்தி விஜய் மற்றும் இளம் வயது ஐஸ்வர்யா ராய் இணைந்து ஒரு காதல் பாடலில் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையுடன் ஒரு பாடலை உருவாக்கியுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், ஜன நாயகன் விஜய்யின் கடைசி படம் கிடையாது என்று வருங்காலத்தில் இந்த ஏஐ டெக்னாலஜியை வைத்து விஜய் நடிக்காமலே படங்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளதாக கூறி வருகின்றனர்.

ரொம்ப தப்பு: ஆனால், அதே சமயம் இதெல்லாம் ரொம்ப தப்பு என்றும் ஒரு நடிகரின் அனுமதியின்றி அவரது முக சாயல் கொண்ட ஏஐ வீடியோக்களை உருவாக்கவும் அதை வைத்து சிலர் வியாபாரம் செய்வதும் தவறான விஷயம் என்றும் இது கண்டிப்பாக பெரிய சர்ச்சையை உருவாக்கும் என்றும் கூறுகின்றனர்.

ஜன நாயகன் செகண்ட் சிங்கிள்: தளபதி விஜய்யின் ஜன நாயகன் ஆடியோ லாஞ்ச் இந்த மாத இறுதியில் மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெறவுள்ள நிலையில், ஜன நாயகன் ஒரிஜினல் செகண்ட் சிங்கிள் கூடிய சீக்கிரமே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X