துணிவாக இருந்தாலும் சரி..யாராக இருந்தாலும் சரி..தளபதி தான் ஃபர்ஸ்ட்..விஜய் அஜித் ரசிகர்கள் மோதல்!

சென்னை : அஜித்தின் 61வது படத்தின் டைட்டில் வெளியான நிலையில் விஜய், அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் மோதலை ஆரம்பித்துள்ளனர்.

வலிமை படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத்துடன் கைகோத்துள்ளார். போனிகபூர் தயாரிக்கும் படத்தில் அஜித் ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார்.

ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஹைதராபாத்தில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்ட முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பாங்காங்கில் நடைபெறவுள்ளது.

துணிவு

துணிவு

அஜித் 61திரைப்படம் குறித்து நீண்டநாட்களான அப்டேட்டுகள் எதுவும் வெளியாகாத நிலையில்,படக்குழு நேற்று முன்தினம் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது. அதில்,கையில் துப்பாக்கி வைத்துக் கொண்டு கூலாக தாடி மற்றும் மீசையுடன் காட்சி அளிக்கிறார் அஜித். இதையடுத்து இரண்டாவது போஸ்டரையும் படக்குழு நேற்று வெளியிட்டது.

போஸ்டர் மோதல்

போஸ்டர் மோதல்

இரண்டு நாட்களாக அஜித் போஸ்டர் குறித்து சோஷியல் மீடியாவில் பரபரப்பாக இருந்ததால், காண்டாகிப்போன விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தள பக்கத்தில் கருத்து மோதல்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். அதில், துணிவா இருந்தாலும் சரி..யாராக இருந்தாலும் சரி ஃபர்ஸ்ட் தளபதிதான் என போஸ்டரை வெளியிட்டு வைரலாக்கினர்.

எங்களுக்கு துணிவு ஜாஸ்தி

எங்களுக்கு துணிவு ஜாஸ்தி

இதற்கு பதிலடி கொடுத்த மதுரை அஜித் ரசிகர்கள் எங்களுக்கு எதிரியா இருக்கனும்னு நினைக்காத, ஏன்னா எங்களுக்கு துணிவு ஜாஸ்தி, மீறி நினைச்சா உன் வாரிசுவையே அழிச்சுடுவோம். தேசிய நாயகன் அஜித் ஃபேன்ஸ் மதுரை என எழுதப்பட்டுள்ள போஸ்டரை ஒட்டி உள்ளனர். இவ்வாறு இருதரப்பு ரசிகர்களும் திடீரென போஸ்டர் மோதலில் ஈடுபட்டுள்ள சம்பவம் சமூக வலைதளத்தில் பரபரப்பாகி உள்ளது.

இல்லையா சார் ஒரு எண்டு

இல்லையா சார் ஒரு எண்டு

அதுமட்டும் இல்லாமல் திருச்சியைச்சேர்ந்த அஜித் ரசிகர்கள், வரைமுறை இல்லாமல் வர நாங்கள் யாரோட வாரிசும் இல்ல தனியா துணிவோட இருக்கும் எங்களுக்கு எவரும் நிகர் இல்லை என போஸ்டர் ஒட்டி உள்ளனர். அஜித், விஜய் இருவருமே நண்பர்களாக இருக்கும் போது எதாவது படம் குறித்து செய்தி வெளியானால், இருரசிகர்களும்சேர்ந்து கொண்டு இப்படி ஏழரையை கூட்டிவிடுகின்றனர். இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு என சோஷியல் மீடியா பிரியர்கள் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X