Don't Miss!
- Lifestyle
உங்க பிறந்த தேதி 6,15 மற்றும் 24 இதுல ஒன்னா? அப்ப உங்க எதிர்காலம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
- News
என் பைக்கை ஓவர்டேக் பண்ணுவியா? பொங்கிய 'குங்பூ' மாஸ்டர்.. தாக்கப்பட்ட ஜொமோட்டோ ஊழியர்.. பரிதாபம்
- Automobiles
இது இருக்குற வரைக்கும் மாருதியை அசைக்க முடியாது! காசை கொடுத்துவிட்டு காருக்காக தவம் கிடக்கும் 4.05 லட்சம் பேர்
- Technology
iPhone 15 சீரீஸ்: மொத்தம் 4 மாடல்கள்.. அனைத்திலுமே "இந்த" அம்சம் இருக்கும்.. என்னது அது?
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Finance
கூகுள் ஊழியரின் கண்ணீர்.. பிரசவ அறை, கை குழந்தை, தாய் மரணம், இண்டர்வியூவ் மத்தியில் பணிநீக்கம்!
- Sports
என்ன தெரிகிறது அங்கு??.. போட்டியின் போது அம்பயர் எராஸ்மஸ் செய்த காரியம்.. இணையத்தில் சிரிப்பலை!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ட்விட்டரில் சண்டை போட்டுக் கொண்டிருந்த விஜய், அஜித் ரசிகர்களை ஒன்றிணைத்த ப்ளூ சட்டை மாறன்.. எப்படி?
சென்னை: விமர்சகரும் ஆன்டி இண்டியன் படத்தின் இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களை சமூக வலைதளங்களில் ஒன்றிணைத்துள்ளார் என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
Recommended Video
நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி 24ம் தேதி வெளியானது. வழக்கம் போல இந்த படத்தையும் தனது பாணியில் கழுவி ஊற்றி விமர்சித்து இருந்தார் ப்ளூ சட்டை மாறன்.
அதன் காரணமாக, ப்ளூ சட்டை மாறனுடன் ட்விட்டரில் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து சண்டை போட்டு வருகின்றனர். இதில், சுவாரஸ்யம் என்னவென்றால் விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களுடன் இணைந்து ப்ளூ சட்டை மாறனை திட்டித் தீர்த்து வருகின்றனர்.
தனுஷ்
ட்வீட்டுக்கு
லைக்
போட்டாரா
ஐஸ்வர்யா...
எல்லாமே
அதுக்குத்தான்
…
சமூக
வலைதளத்தில்
பரவும்
தகவல்!

போட்டிக்காக
சினிமாவில் கொடி கட்டிப் பறக்க வேண்டும் என்பதற்காகவும் தன்னுடைய படம் தான் அதிக வசூல் ஆகிறது என்பதை காட்ட வேண்டும் என்பதற்காகவும் எம்ஜிஆர் - சிவாஜி காலத்தில் இருந்தே ரசிகர்கள் சண்டை நடந்து வருகிறது. சமூக வலைதளங்களின் பெருக்கத்தால் தற்போது அந்த சண்டை ரஜினிகாந்த் - கமல் மற்றும் விஜய் - அஜித் என விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

படு கேவலமாக
விமர்சனங்களும் எல்லையை மீறி செல்லத் தொடங்கி இருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் படு கேவலமாக ஒரு நடிகரை தூக்கி வைத்தும், மற்றொரு நடிகரை ஆபாசமாக மீம் போட்டும் ட்விட்டர் சண்டையை போட்டு வருகின்றனர். யாருடைய நடிகர் டாப் என்கிற இடத்தில் தான் இந்த சண்டையே ஆரம்பிக்கிறது.

தல தளபதி ரசிகர்கள்
ட்விட்டர் சண்டை என்றாலே இந்தியாவையே திரும்பி பார்க்கும் அளவுக்கு அவ்வளவு கேவலமாக சண்டை போடுபவர்கள் என்றால் அது விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் தான். இவர்கள் தொல்லை தாங்கமல் தான் நடிகர் அஜித் ‘தல' பட்டத்தையே துறந்தார் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேர்கொண்ட பார்வை படத்திலும், ஒருத்தருக்கு விஸ்வாசமா இருக்க இன்னொருத்தரை மட்டம் தட்டாதீங்க எனக் கூறியிருந்தார்.

நண்பர் அஜித்
அதே நேரத்தில், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களின் சண்டையை தடுக்க நடிகர் விஜய் கோடுசூட் மாட்டி வந்து நண்பர் அஜித் மாதிரி வரலாம்னு நினைச்சேன் என அஜித் பற்றி பேசி ரசிகர்களின் கோபத்தை தணிக்க முயற்சி செய்தார். ஆனால், விஜய் மற்றும் அஜித் இருவரும் பல முறை முயற்சி செய்தும் ஒன்று சேராத ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறன் போடும் ட்வீட்டுகளால் தற்போது ஒன்று சேர்ந்துள்ளனர் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஒன்றிணைந்த ரசிகர்கள்
அஜித்தின் வலிமை படத்தை மோசமாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறனை ரசிகர்களை தாண்டி சினிமா பிரபலங்கள் ஆன ஜான் கொக்கன், ஆரி, சுரேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் எச்சரித்துள்ளனர். ஆனாலும், தொடர்ந்து அஜித்துக்கு எதிரான பதிவுகளை ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டு வரும் நிலையில், அதிகப்படியான விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்களுக்கு ஆதரவாக அவர்களுடன் ஒன்றிணைந்து ப்ளூ சட்டை மாறனை திட்டி வருகின்றனர். ஏனென்றால், அடுத்து வரும் பீஸ்ட் படத்துக்கும் இதே வேலையைத் தான் இவர் செய்வார் இவருக்கு விஜய் ரசிகர்கள் யாரும் சப்போர்ட் பண்ணாதீங்க என விஜய் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

மாற வேண்டும்
நடிகர்கள் 100 கோடி ரூபாய் சம்பளத்தை நோக்கி முன்னேறி வருகின்றனர். ஆனால், ரசிகர்கள் தேவையில்லாமல் சமூக வலைதளங்களில் ஆபாச சண்டைகளை போட்டுக் கொள்ளாமல் தங்களுக்கு பிடித்த படங்களை பார்த்து விட்டு கடந்து சென்றால், இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாது என நியூட்ரல் ஃபேன்ஸ் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு எல்லாம் காரணமே சில பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்கள் தான் என்றும், தயாரிப்பாளர்களே அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், ஏன் தேவையில்லாத சண்டையை இவர்கள் கிளப்பி விடுகின்றனர் என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.