பாவம் மகேஷ் பாபு மாட்டிக்கிட்டாரு.. விஜய், அஜித் ரசிகர்கள் சும்மா வச்சு செய்றாங்க.. வெடித்தது மோதல்!

சென்னை: வாரிசு படம் மூலம் டோலிவுட்டில் நடிகர் விஜய் பலமாக காலடி எடுத்து வைக்க உள்ள நிலையில், மகேஷ் பாபு ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் மத்தியில் கடும் ட்விட்டர் சண்டை வெடித்துள்ளது.

மகேஷ் பாபுவின் கில்லி, போக்கிரி உள்ளிட்ட படங்களை தான் ரீமேக் செய்து விஜய் நடித்து பெரிய ஆளானார் என்று மகேஷ் பாபு ஓட்டி வந்தனர்.

இந்நிலையில், கோலிவுட்டுக்கு ஒன்னுன்னா பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டோம் என அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களுடன் கைகோர்த்து மகேஷ் பாபுவை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

ஆக்டிங்.. ஓவர் ஆக்டிங்

ஆக்டிங்.. ஓவர் ஆக்டிங்

தெறி, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடிகர் விஜய்யின் நடிப்பு கச்சிதமாக இருக்கும் என்றும், அதே எமோஷனலான காட்சிகளில் மகேஷ் பாபுவின் நடிப்பு ஓவர் ஆக்டிங்காக இருக்கும் என விஜய் ரசிகர்கள் வந்த சண்டையை விடாமல் வச்சு செய்து வருகின்றனர். விஜய் ரசிகர்கள் மற்றும் மகேஷ் பாபு ரசிகர்கள் மத்தியில் இந்த மோதல் கடந்த சில நாட்களாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ரியாக்‌ஷன்

ரியாக்‌ஷன்

செல்போனில் இருக்கும் எமோஜிக்களில் கூட ஏகப்பட்ட ரியாக்‌ஷன்கள் இருக்கும் ஆனால், மகேஷ் பாபுவின் முகத்தில் எந்த நேரத்திலும், எந்த காட்சியிலும் ஒரே எக்ஸ்பிரஷன் தான் என விஜய் ரசிகர்கள் வெறுப்பேற்றி மீம்களாக போட்டுத் தாக்கி வருகின்றனர். பதிலுக்கு மகேஷ் பாபு ரசிகர்களும் விஜய் ரசிகர்களுடன் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இட்ச் கார்ட் விளம்பரம்

இட்ச் கார்ட் விளம்பரம்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் பாடல் காட்சிகள், அவர் நடித்துள்ள படக் காட்சிகளை வரிசையாக போட்டு விஜய் ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். இந்த பாடல் வீடியோவை ஷேர் செய்து ஃப்ரீ இட்ச் கார்ட் புரமோஷன் என மகேஷ் பாபுவை விஜய் ரசிகர்கள் வச்சு செய்ய அதற்கு மகேஷ் பாபு ரசிகர்கள் இன்னொரு வீடியோவை போட்டு கலாய்த்துள்ளனர்.

ரோடு க்ளீன் பண்ணனுமா

ரோடு க்ளீன் பண்ணனுமா

சுறா படத்தில் விஜய் நடனமாடும் நான் நடந்தா அதிரடி பாடலில் வரும் கஷ்டமான ஸ்டெப்ஸை போட்டு உங்க ஏரியா ரோடுகளை க்ளீன் பண்ணனுமா? என மகேஷ் பாபு ரசிகர்கள் பஞ்சாயத்தைக் கூட்ட அஜித் ரசிகர்கள், நடிகர் விஜய்க்காக ஆதரவு கரம் நீட்டி உள்ளனர்.

அஜித் ரசிகர்கள் ஆதரவு

அஜித் ரசிகர்கள் ஆதரவு


சண்டை போடுவதிலேயே அஜித் - விஜய் ரசிகர்களை அடித்துக் கொள்ள இந்தியாவில் அல்ல உலகிலேயே ஆட்கள் இல்லை. ஆனால், கோலிவுட்டுக்கு ஒரு பிரச்சனை மற்ற மாநிலத்தில் இருந்து வருகிறது என்றால், உடனடியாக தல தளபதி ரசிகர்கள் ஒன்றாக இணைந்து ட்விட்டர் சண்டை போட்டு வருவதையும் மறுக்க முடியவில்லை. அந்த அளவுக்கு அவர்கள் மத்தியில் பாண்டிங் உள்ளது.

Recommended Video

Thalapathy வேற Level | Vijay பெயரில் இரத்ததான Mobile App *kollywood | Filmibeat Tamil
பாதிக்கப்படுவது நடிகர்கள் தான்

பாதிக்கப்படுவது நடிகர்கள் தான்

இந்த தேவையற்ற ரசிகர்கள் சண்டையால் வீணாக பாதிக்கப்படுவது ரசிகர்கள் தான். சமீபத்தில் விக்ரம் படத்தை பார்த்து பாராட்டி இருந்தார் மகேஷ் பாபு. விஜய்யின் வாரிசு படத்தில் கேமியோவாக மகேஷ் பாபு வர வாய்ப்புகள் உள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. மகேஷ் பாபு விடுத்த பசுமை சவாலை ஏற்றுக் கொண்டு நடிகர் விஜய்யும் வீட்டில் செடிகளை நடும் புகைப்படங்களை வெளியிட்டார். அஜித், விஜய், மகேஷ் பாபு மட்டுமல்ல மற்ற நடிகர்கள் அனைவருமே நண்பர்களாக உள்ள நிலையில், ரசிகர்கள் தேவையில்லாமல் சண்டைப் போடுவதால் பெரிதும் பாதிக்கப்படுவது அசிங்கப்படுவது அவர்களுக்கு பிடித்தமான நடிகர் தான் என்பதை ரசிகர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X