சூர்யாவுக்கு ஒண்ணுன்னா சும்மா விடமாட்டோம்.. பிரபாஸ் ரசிகர்களை பொளந்துக்கட்டிய விஜய், அஜித் ஃபேன்ஸ்!
சென்னை: கோலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் காரணமாக நடிகர்களின் ரசிகர்களுக்குள் போட்டி இருந்தாலும், மற்ற மாநில நடிகர்களின் ரசிகர்கள் தமிழ் நடிகர்களை ட்ரோல் செய்ய ஆரம்பித்தால் சும்மா விடுவதில்லை.
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு கங்குவா படத்தின் மிரட்டலான க்ளிம்ப்ஸ் வெளியானது. ஆதிபுருஷ் ட்ரோலுக்கு பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு உடனடியாக பிரபாஸ் ரசிகர்கள் களத்தில் குதித்தனர்.

கங்குவா VFX ஆதிபுருஷை விட மோசம் என ட்ரோல் செய்ய ஆரம்பிக்க, சூர்யா ரசிகர்களை விட அஜித், விஜய் ரசிகர்கள் களத்தில் இறங்கி பிரபாஸ் ரசிகர்களை ஓடவிட்டுள்ளனர்.
அதிகரிக்கும் நெகட்டிவிட்டி: பிரம்மாண்டமான படங்கள் வெளியானாலே அந்த படத்தை பார்த்து பாராட்டுவதை விட அதில் உள்ள குறைகளை கண்டுபிடிப்பது, எங்கே இருந்து காப்பி அடித்தார்கள் என்கிற சிஐடி வேலைகளை செய்வதே சமீப காலமாக நெட்டிசன்களுக்கு வேலையாக மாறிவிட்டது.
சில யூடியூப் விமர்சகர்களும் இப்படி நெகட்டிவிட்டியை பரப்புவதையே வேலையாக பார்த்து வருகின்றனர். சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் கொண்டாட வந்த க்ளிம்ப்ஸை ஆதிபுருஷ் உடன் ஒப்பிட்டு பிரபாஸ் ரசிகர்களும் ட்ரோல் செய்ய நள்ளிரவில் இருந்தே ஆரம்பித்தனர்.
ஆதிபுருஷ் உடன் ஒப்பிட்டு: பிரபாஸ் நடிப்பில் 500 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான ஆதிபுருஷ் படத்துடன் ஒப்பிட்டு சூர்யாவின் கங்குவா படத்தை கம்பேர் செய்ய ஆரம்பித்து விட்டனர் பிரபாஸ் ரசிகர்கள். இந்த படத்தின் சிஜி சரியில்லை என்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் சொதப்பல் என்றும் இதற்கு ஆதிபுருஷே பெட்டர் என்றும் உருட்ட ஆரம்பித்தனர்.

களமிறங்கிய அஜித், விஜய் ரசிகர்கள்: பிரபாஸ் ரசிகர்கள் நெகட்டிவிட்டியை பரப்ப ஆரம்பித்ததும் சூர்யா ரசிகர்கள் சண்டை போட அவர்களுக்கு பக்கத் துணையாக விஜய் மற்றும் அஜித் ரசிகர்களும் களத்தில் இறங்கி, விஷுவலில் சற்று குறைகள் இருந்தாலும், இது கடைசி அவுட்புட் அல்ல, வெறும் க்ளிம்ப்ஸ் தான். ஆனால், அதற்காக ஆதிபுருஷ் அளவுக்கு படுமோசமாக இல்லை என கமெண்ட் போட்டு ட்விட்டர் யுத்தத்தை நடத்தி வருகின்றனர்.
லோக்கலில் ரசிகர்கள் சண்டை போட்டுக் கொண்டாலும், பக்கத்து ஸ்டேட் நடிகர்களின் ரசிகர்கள் சண்டைக்கு வந்தால் விட்டுக் கொடுக்காமல் விஜய், அஜித் ரசிகர்கள் சப்போர்ட் செய்ததற்கு சூர்யா ரசிகர்களும் நன்றி தெரிவித்துள்ளனர். சூர்யாவின் கங்குவா க்ளிம்ப்ஸ் கூஸ்பம்ப்ஸ் தான், படம் நல்லாவே வரும் என ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர். டோலிவுட்டில் உள்ள சூர்யா ரசிகர்களும் பிரபாஸ் ரசிகர்களுக்கு எதிராக களத்தில் குதித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











