என்னது விஜய் -அஜித் இணைந்து நடிக்கப் போறாங்களா.. பிரபல இசையமைப்பாளர் வெளியிட்ட சூப்பர் தகவல்!

சென்னை : நடிகர் விஜய் மற்றும் அஜித் ஆரம்ப காலங்களில் சில படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

ஆனால் துவக்கத்திலேயே இருவரும் இணைந்து நடிப்பதை தவிர்த்து விட்டனர்.

அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே தொடர்ந்து பனிப்போர் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.

நடிகர்கள் விஜய் -அஜித்

நடிகர்கள் விஜய் -அஜித்

நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் இருவருக்கும் சிறப்பான ரசிகர்கள் காணப்படுகின்றனர். இந்த ரசிகர்களுக்கு இவர்கள்தான் மாஸ். இவர்களின் படங்கள் வெளியாகும்போது மற்றவர்கள் அதுகுறித்து விமர்சனம் செய்வதும் தொடர்ந்து பல சண்டைகள் ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது.

ரசிகர்களின் வார்த்தைப்போர்

ரசிகர்களின் வார்த்தைப்போர்

இருதரப்பினரும் சமூக வலைதளங்களின் மூலமாக வார்த்தைப்போர் நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு துவக்கத்தில் இருவருடைய படங்களும் வெளியாகின. முன்னதாக பிப்ரவரியில் அஜித்தின் வலிமை படம் வெளியான சூழலில் ஏப்ரலில் விஜய்யின் பீஸ்ட் படம் ரிலீசானது. இந்த இரு படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

மாற்றி மாற்றி விமர்சனம்

மாற்றி மாற்றி விமர்சனம்

வலிமை படம் வெளியான போது அந்தப் படத்தை மோசமாக கலாய்த்து தள்ளினர் விஜய் ரசிகர்கள். பைக் ஸ்டண்ட் காட்சிகளை பயங்கரமாக விமர்சித்தனர். அதற்கு பழி தீர்க்கும் வகையில் விஜய்யின் பீஸ்ட் படம் வெளியானபோது அந்தப் படத்தின் காட்சிகளையும் அஜித் ரசிகர்கள் விமர்சித்தனர்.

இருவரையும் இணைக்கும் முயற்சி

இருவரையும் இணைக்கும் முயற்சி

விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடையே இந்தப் போக்கு காணப்பட்டாலும் இவர்கள் இருவரையும் இணைத்து படம் இயக்க இயக்குநர்கள் தொடர்ந்து பல சூழல்களில் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் இந்தப் படம் அமைய வேண்டும் என்பதால் இந்த முயற்சி தொடர்ந்து பேச்சளவிலேயே காணப்பட்டது.

மிகவும் ரிஸ்க்கான வேலை

மிகவும் ரிஸ்க்கான வேலை

இவர்கள் இருவரும் இணைந்து ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் நடித்திருந்தாலும் அது ஆரம்பக் கட்டத்தில் நடித்தது என்பதால் அந்த அளவிற்கு எந்த தாக்கத்தைம் ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரையும் இணைத்து படம் எடுத்தால் அது முள் மேல் நடப்பதாகவே முடியும்.

வெங்கட் பிரபு தொடர் முயற்சி

வெங்கட் பிரபு தொடர் முயற்சி

இந்நிலையில் தொடர்ந்து இவர்கள் இருவரையும் இணைத்து படமியக்க இயக்குநர் வெங்கட் பிரபு தன்னுடைய விருப்பத்தை கூறிவந்தார். அஜித் வில்லனாகவும் விஜய் ஹீரோவாகவும் இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இதற்கான ஸ்கிரிப்டை தான் தயாரித்துள்ளதாகவும் அவர் முன்னதாக கூறினார்.

விரைவில் அறிவிப்பு -கங்கை அமரன்

விரைவில் அறிவிப்பு -கங்கை அமரன்

சமீபத்தில் மாநாடு, மன்மத லீலை என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்துள்ள வெங்கட் பிரபு, விஜய், அஜித் இணையும் இந்தப் படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாக வெங்கட் பிரபுவின் அப்பாவும் பிரபல இயக்குநர் மற்றும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Sibiraj | Age is just a number, இந்த வசனம் Vijay க்கு பொருத்தமானது | HBD Thalapathy |*Interview
மல்ட்டி ஸ்டார் பான் இந்தியா படம்

மல்ட்டி ஸ்டார் பான் இந்தியா படம்

இந்தப் படம் பல நடிகர்கள் நடிக்கும் மல்ட்டி ஸ்டார் படமாகவும் பான் இந்தியா படமாகவும் உருவாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய ஹீரோ தான் பெஸ்ட் என்று விஜய், அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அடித்துக் கொண்டாலும், இத்தகைய முயற்சியை அவர்களும் வரவேற்றுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X