சமமான திரையரங்குகளில் வெளியாகும் அஜித் -விஜய் படங்கள்.. ரசிகர்களை எந்தப் படம் கவரும்?
சென்னை : நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் இருவரின் துணிவு மற்றும் வாரிசு படங்கள் வரும் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளன.
இரண்டு படங்களும் வரும் ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படங்களின் ரிலீசுக்காக ரசிகர்கள் தற்போது காத்திருக்கின்றனர்.
இந்தப் படங்கள் தமிழகத்தில் எத்தனை திரையரங்குகளில் ரிலீசாகும் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்றன.

பொங்கலையொட்டி ரிலீசாகும் விஜய் -அஜித் படங்கள்
நடிகர்கள் விஜய் மற்றும் அஜித்தின் வாரிசு மற்றும் துணிவு படங்கள் தற்போது ஏறக்குறைய சூட்டிங் நிறைவடைந்துள்ளன. இந்த இரு படங்களும் வரும் பொங்கலையொட்டி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித் மற்றும் விஜய் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது அவர்களது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது.

அஜித்தின் துணிவு படம்
அஜித்தின் துணிவு படம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக ஹெச் வினோத் மற்றும் போனிகபூர் கூட்டணியுடன் இணைந்துள்ளார் அஜித். இந்தப் படத்தின் சூட்டிங் விசாகப்பட்டினம், ஐதராபாத் மற்றும் பாங்காக் போன்ற இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் பிரம்மாண்டமான மவுண்ட் ரோடு மற்றும் பேங்க் செட்கள் போடப்பட்டு இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டது.

விஜய்யின் வாரிசு
இதனிடையே விஜய்யின் வாரிசு படம் பேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளது. இந்தப் படத்தை பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கியுள்ளார். தில் ராஜூ தயாரித்துள்ள இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், பொங்கலையொட்டி இந்தப் படமும் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாகியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
இந்த இரு படங்களும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படங்களாக மாறியுள்ள நிலையில், இந்தப் படங்களின் ரிலீசுக்காக அவர்களது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். மேலும் இந்தப் படங்களின் அடுத்தடுத்த அப்டேட்களுக்காகவும் காத்திருக்கின்றனர். இந்த இருப் படங்களும் வித்தியாசமான கதைக்களங்களுடன் உருவாகியுள்ள நிலையில் எந்தப் படம் ரசிகர்களை கவரும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சமமான திரையரங்குகள்
இதனிடையே இந்த இரு படங்களும் தமிழகத்தில் சமமான திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக துணிவு படம் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது சமமான திரையரங்குகளில் இந்தப் படங்கள் வெளியாகவுள்ளதாகவும், எந்தப் படம் அதிகமாக ரசிகர்களை கவருகிறதோ, அந்தப் படத்தின் திரையரங்குகளில் அதிகரிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











