விஜய்யை விட்டுக் கொடுக்காத விக்ராந்த்.. அஜித் உதவியை மறக்காத விஷ்ணு விஷால்.. ரஜினி ரியாக்‌ஷன் செம!

சென்னை: லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா லியோ முத்து உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், படத்தின் நாயகர்களானா விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் மேடை ஏறி பேசும் போது விஜய் மற்றும் அஜித் பெயர்களை சொல்ல அரங்கமே அதிர்ந்து விட்டது. மேலும் நடிகர் ரஜினிகாந்தின் ரியாக்ஷனும் இசை வெளியிட்டு விழாவில் இருந்தவர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.

நடிகர் தனுஷை வைத்து 3 மற்றும் வை ராஜா வை என இரண்டு படங்களை இயக்கி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதன் பின்னர் படங்களை இயக்குவதை நிறுத்திவிட்டு தனது இரு மகன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென கணவர் தனுஷை பிரிவதாக அறிவித்தார். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் மகன்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

Vijay and Ajith name echoed at Rajinikanths Lal Salaam audio launch

மீண்டும் இயக்குநரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: பல ஆண்டுகளுக்கு பிறகு கணவர் தனுஷை பிரிந்தவுடன் இயக்குநராகும் முயற்சியில் ஈடுபட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆல்பம் பாடல் ஒன்றை இயக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் அப்பா ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரை வைத்து அவர் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.

அரங்கில் ஒலித்த அஜித் பெயர்: நிகழ்ச்சி தொகுப்பாளர் விஷ்ணு விஷாலிடம் ஒரு கிரிக்கெட் அணிக்கு கோச்சாக நீங்கள் எந்த நடிகரை நியமிப்பீர்கள் என்கிற கேள்வி எழ, அவர் உடனே அஜித் குமார் என சொன்னதுமே லால் சலாம் ஆடியோ லான்ச் அரங்கமே தல என்கிற கோஷத்துடன் அஜித் குமார் என கத்த தொடங்கி விட்டனர். சமீபத்தில், வெள்ள பாதிப்பில் விஷ்ணு விஷால் சிக்கிய நிலையில், அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷாலுக்கு கிளப் ஹவுஸ்க்கு செல்ல வாகனத்தை அஜித் ஏற்பாடு செய்து கொடுத்தார் என்றும் அதற்கு நன்றி என்றும் விஷ்ணு விஷால் பதிவிட்டு இருந்தார்.

அண்ணன் விஜய்யை மறக்காத தம்பி: தளபதி விஜய்யின் தம்பி உறவுமுறையான விக்ராந்த்திடம் அதே போன்ற கேள்வியை எழுப்ப அவர் உடனே விஜய் தான் என்னோட டீம் கோச் என அதிரடியாக சொல்லி விட்டார். விஜய் பெயரை விக்ராந்த் சொன்னதுமே அரங்கம் மீண்டும் அதிர்ந்தது.

ரஜினி ரியாக்‌ஷன்: விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ரஜினிகாந்த் இருக்கும் லால் சலாம் மேடையில் விஜய் மற்றும் அஜித் பெயர்களை சொல்லிய நிலையில், அதை பார்த்த ரஜினிகாந்த் சிரித்த காட்சிகள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளன. மேலும், இருவரும் பேசும் போது ரஜினி சார் படத்தில் நாங்க இருக்கிறோம் என்பதே எங்களுக்கு கிடைத்த பாக்கியம் என மகிழ்ச்சியடைந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X