இவங்கதான் கோலிவுட்டின் கடைசி சூப்பர் ஸ்டார்கள்.. பக்கா மாஸ் புகைப்படம்.. டிரெண்ட் செய்யும் ஃபேன்ஸ்!
சென்னை: ஓடிடி காலம் தொடங்கிவிட்ட நிலையில், இனிமேல் தமிழ் சினிமாவில் புதிதாக சூப்பர் ஸ்டார்கள் உதிக்க முடியாது என ரசிகர்கள் விஜய் மற்றும் அஜித்தால் கடைசி சூப்பர் ஸ்டார்கள் என ஏஐ எடிட் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் எம்கே தியாகராஜ பாகவதர் முதல் சூப்பர் ஸ்டாராக அறியப்பட்டார். அதன் பின்னர் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் உள்ளிட்ட நடிகர்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று முன்னணி நட்சத்திரங்களாக மாறினர். சூப்பர் ஸ்டார் என்ற டைட்டிலுடன் ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 47 வருடங்கள் தமிழ் சினிமாவில் கெத்து காட்டி வருகிறார். அவருக்கு முன்னதாகவே சினிமாவில் நடிக்கத் தொடங்கிய உலகநாயகன் இன்னமும் அவருடன் போட்டியிட்டு பல பெரிய படங்களை லைன் அப் வைத்திருக்கிறார்.

கடைசி சூப்பர் ஸ்டார்கள்: ரஜினிகாந்த் கமலைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக அஜித் மற்றும் விஜய் வளம் வரும் நிலையில், சினிமாவிலிருந்து அரசியலுக்கு நடிகர் விஜய் முன்னேற முடிவெடுத்துள்ளார். நடிகர் அஜித் இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் வெளியிடுவது போல நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், இவர்கள் இருவரும் நடிப்பதை நிறுத்தி விட்டால் இவர்கள்தான் தமிழ் சினிமாவின் கடைசி சூப்பர் ஸ்டார்கள் என ரசிகர்கள் ஃபேன் மேட் போஸ்டர் ஒன்றை ஏஐ மூலம் உருவாக்கி இருவரும் ஒன்றாக சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
ஃபேன் பேஸ் முக்கியம்: வெற்றிமாறன் போன்ற இயக்குநர்கள் இயக்கும் படங்கள் தமிழ் சினிமாவில் 100 கோடி வசூலை கூட தொடுவதில்லை. ஆனால் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த மெகா சீரியல் என கலாய்க்க பட்ட வாரிசு திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூலை ஈட்டுகிறது. இதற்குப் பெயர்தான் ஃபேன் பேஸ் என்கின்றனர். நல்ல படங்களை விட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளார்கள் என்பதைப் பார்த்து அதிகப்படியான ரசிகர்கள் தியேட்டரை நோக்கி வருகின்றனர். விஜய், அஜித்துக்கு உருவான அளவுக்கு ரசிகர்கள் சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களுக்கு இதுவரை பெரிதாக இல்லை என்பது அவர்கள் நடிக்கும் படங்கள் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை எட்டவே சிரமப்படுவதன் மூலம் தெரிகிறது.
ரஜினிகாந்தின் ஜெயிலர், விஜய்யின் லியோ படங்கள் எல்லாம் 600 கோடி வசூல் செய்து இண்டஸ்ட்ரி ஹிட் அடித்ததற்கு முக்கிய காரணமே அவர்களுக்கு இருக்கும் ரசிகர் படை தான் என்கின்றனர். விஜய், அஜித்துக்கு பிறகு அந்தளவுக்கு ரசிகர்களை நடிகர்களுக்கு உருவாக்க திரையரங்குகளில் பல நாட்கள் படங்கள் ஓட வேண்டும் என்றும் ஓடிடி வருகையால் அதற்கான வாய்ப்பு குறைந்து விட்டது. 4 வாரத்தில் வீட்டுக்கே படம் வருவதால் சூப்பர் ஸ்டார்கள் இனி உருவாக வாய்ப்பில்லை என்கின்றனர்.
இதுவும் மாறும்: விஜய், அஜித்துக்கு பிறகும் சினிமா உலகம் இயங்கத்தான் போகிறது. நல்ல படங்களும் அடுத்து இளம் தலைமுறை நடிகர்கள் வந்தால் நிச்சயம் ரசிகர்கள் அவர்கள் படங்களையும் வியந்து தியேட்டர்களில் பார்த்து இண்டஸ்ட்ரி ஹிட் கொடுப்பார்கள் என்பது காலத்தின் கட்டாயம். மாற்றம் ஒன்றே மாறாதது!


Click it and Unblock the Notifications











