விஜய் - அஜித் இணைந்து நடித்திருக்க வேண்டிய படம் இது... கடைசியில் ஜாக்பாட் அடித்தது அந்த நடிகருக்கு!

சென்னை: விஜய்யும் அஜித்தும் ஒரே காலக்கட்டத்தில் திரையுலகில் அறிமுகமாகினர்.

1995ம் ஆண்டு வெளியான ராஜாவின் பார்வையிலே படத்தில் இருவரும் ஒன்றாக நடித்திருந்தனர்.

அதன்பின்னர் விஜய் - அஜித் கூட்டணி எந்தப் படத்திலும் இணையவே இல்லை.

ஆனால், விஜய்யுடன் இணைந்து நடிப்பதற்காக தேடி வந்த வாய்ப்பை அஜித் நிராகரித்ததாக சொல்லப்படுகிறது.

 ராஜாவின் பார்வையிலே

ராஜாவின் பார்வையிலே

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களாக வலம் வரும் விஜய், அஜித் இருவருக்கும் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. ஒரே காலக்கட்டத்தில் திரையுலகில் அறிமுகமான இருவரும், ராஜாவின் பார்வையிலே படத்தில் மட்டும் இணைந்து நடித்தனர். இருதரப்பு ரசிகர்களும் விஜய்யையும் அஜித்தையும் எதிரெதிர் துருவங்களாக பார்த்து வருகின்றனர். ஆனால், பொது இடங்களில், நிகழ்ச்சிகள் என எங்கு பார்த்துக்கொண்டாலும் அவர்கள் நண்பர்களாகவே பழகி வருகின்றனர்.

 மீண்டும் இணைய வாய்ப்பு

மீண்டும் இணைய வாய்ப்பு

இந்நிலையில், ராஜாவின் பார்வையிலே படத்துக்குப் பின்னர் விஜய்யும் அஜித்தும் இன்னொரு படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. வசந்த் இயக்கத்தில் 1997ம் ஆண்டு வெளியான திரைப்படம் நேருக்கு நேர். மணிரத்னம் தயாரித்த இந்தப் படத்தில் விஜய், சூர்யா, சிம்ரன், கெசல்யா, ரகுவரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் முதலில் விஜய்யும் அஜித்தும் தான் நடிக்கவிருந்தனராம்.

 சூர்யாவுக்கு அடித்த ஜாக்பாட்

சூர்யாவுக்கு அடித்த ஜாக்பாட்

ஆனால், அந்நேரம் அஜித்துக்கு கால்ஷீட் இல்லாததால் அவரால் நடிக்கமுடியவில்லையாம். அதன்பிறகே சூர்யாவை நேருக்கு நேர் படத்தில் நடிக்க வைத்தார் இயக்குநர் வசந்த். இதுதான் சூர்யாவின் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப விஜய்யும் சூர்யாவும் அடிக்கடி நேருக்கு நேர் மோதிக்கொண்டே இருப்பார்கள். ரகுவரனின் கேரக்டர், தேவாவின் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

 லோகேஷ் லட்சியம்..?

லோகேஷ் லட்சியம்..?

இந்நிலையில், மீண்டும் விஜய்யும் அஜித்தும் இணைந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அப்படி ஒரு படம் உருவானால் அதனை லோகேஷ் இயக்கினால் தான் ஒர்க் அவுட் ஆகும் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதற்கேற்றபடியே தளபதி படத்தின் ரீமேக்கில் விஜய்யையும் அஜித்தையும் இணைந்து நடிக்க வைக்கலாம் என லோகேஷ் யோசித்து வருகிறாராம். மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி - மம்மூட்டி இணைந்து நடித்த தளபதி ரீமேக்கில், ரஜினி கேரக்டரில் விஜய்யையும் மம்முட்டி பாத்திரத்தில் அஜித்தையும் நடிக்க வைக்கலாம் என லோகேஷ் ஒரு கணக்குப் போட்டு வைத்துள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X