Vijay Ajith: லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா இருக்கும்... ஹைப் கொடுக்கும் விஜய், அஜித் போஸ்டர்!

சென்னை: கோலிவுட்டில் ரஜினி - கமலுக்குப் பின்னர் விஜய் - அஜித் தான் உச்சத்தில் உள்ளனர். விஜய், அஜித் என இருவருக்கும் சமமான ரசிகர்கள் உள்ளனர். கடந்தாண்டு பொங்கலுக்கு விஜய்யின் வாரிசும், அஜித்தின் துணிவும் ஒரே நாளில் நேருக்கு நேர் மோதின. இந்நிலையில், தற்போது விஜய், அஜித் ஒன்றாக இருக்கும் போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது.

ஹைப் கொடுக்கும் விஜய், அஜித் போஸ்டர்


கோலிவுட்டில் 2கே கிட்ஸ்களின் மாஸ் ஹீரோக்களாக விஜய்யும் அஜித்தும் மிரட்டி வருகின்றனர். விஜய் சினிமாவில் இருந்து அரசியல் செல்லும் முடிவோடு பயணித்து வருகிறார். அதேபோல், அஜித்தின் ரசிகர் மன்றங்கள் கலைக்கப்பட்ட பின்னரும் அவரது படங்களுக்கு பெரிய ஓபனிங் கிடைத்து வருகிறது. இதனால் விஜய், அஜித் இருவருமே கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங்ஸ் என கொண்டாடப்படுகின்றனர்.

 Vijay and Ajiths latest fan-made poster is trending now

பல ஆண்டுகளுக்குப் பின்னர் விஜய், அஜித் இருவரது படங்களும் கடந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகின. விஜய்யின் வாரிசு ஃபேமிலி சென்டிமென்டல் ஜானரிலும், அஜித்தின் துணிவு பக்கா ஆக்‌ஷன் படமாகவும் வெளியாகின. இரண்டு படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு பாக்ஸ் ஆபிஸிலும் 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்தன.

இதனால் மீண்டும் விஜய் - அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மோதத் தொடங்கினர். ஆனால், அவர்கள் இருவரும் அப்படியெல்லாம் கிடையாது என்பது அஜித் அப்பாவின் மறைவின் போது தெரியவந்தது. அஜித்தின் அப்பா உயிரிழந்த நேரம் அவரது வீட்டிற்கே சென்று இரங்கல் தெரிவித்து வந்தார் விஜய். தனது நண்பனின் துக்கத்தில் விஜய் பங்கெடுத்துக்கொண்டது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதேபோல், தளபதி 68 அறிவிப்பு வெளியான நேரம், அஜித்தும் விஜய்யுடன் இணைந்து நடிக்கலாம் என சொல்லப்பட்டது. இதனை வெங்கட் பிரபுவின் அப்பா கங்கை அமரனே கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. முன்பு ஒருமுறை வெங்கட் பிரபுவும் விஜய் - அஜித் இணைந்து நடிக்க ரெடி என்றால் அதற்கு என்னிடம் கதை இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் விஜய்யும் அஜித்தும் மாஸ் காட்டும் போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது.

விஜய் லியோ பட லுக்கிலும், அஜித் துணிவு படத்தின் லுக்கிலும் இருக்கும் இந்தப் போஸ்டர் செம்ம ஃபயரிங் மோடில் இருக்கின்றன. இதனால் இருவரும் இணைந்து ஏதாவது படத்தில் நடிக்கப் போகிறார்களா என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அப்படி ஏதும் இல்லை என்றும், அது ஃபேன்மேட் போஸ்டர் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. இருப்பினும் இந்த போஸ்டரை விஜய், அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X