டேனியல் பாலாஜி மரணம்.. இரங்கல் கூட தெரிவிக்காத விஜய், தனுஷ்.. இதுக்கு கூட நேரமில்லையா!

சென்னை: வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி உயிரிழந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ள நிலையில் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், பெரிய நடிகர்களான தனுஷ் மற்றும் விஜய் இதுவரை இரங்கல் கூட தெரிவிக்காதது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

கமல், விஜய், தனுஷ், சிம்பு உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தவர் டேனியல் பாலாஜி. கமல் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் இவரது பாத்திரம் இவருக்கு அடையாளத்தைப் பெற்று தந்தது. இந்த படத்தை தொடர்ந்து, பொல்லாதவன், வை ராஜா வை, அச்சம் என்பது மடமையடா, பைரவா, வட சென்னை, பிகில் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

Vijay and Dhanush didn t even condole Daniel Balaji death

டேனியல் பாலாஜி: தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து இவர், நேற்று திருவான்மியூரில் உள்ள இவரது இல்லத்தில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 48 வயதே ஆன அவரது மரணம் பலரை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

கண் தானம்: இவரது மரணச்செய்தி கேள்விப்பட்ட இயக்குநர் கௌதம் மேனன்,வெற்றி மாறன், அமீர் இரவே மருத்துவமனைக்கு பதறியடித்துக்கொண்டு ஓடிவந்தனர். அவர் கண் தானம் செய்து இருப்பதால், தனியார் மருத்துவமனைக்கு மருத்துவர்களின் குழு வந்த பின் அவரது கண் தானமாக வழங்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல், புரசைவாக்கத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ஓட்டேரி பகுதியில் உள்ள அரசு மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

பலர் இரங்கல் : அவரது உடலுக்கு விஜய்சேதுபதி, அமீர், அதர்வா, இயக்குநர் அருண் மாதேஸ்வரன், ஒளிப்பதிவாளர் ஆர்டி ராஜசேகர், நடிகர் சென்ட்ராயன் என பலரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பணியில் பிஸியாக இருப்பதால் தனது எக்ஸ் தள பக்கத்தில் அஞ்சலி செலுத்தி உள்ளார். அதேபோல நடிகை ஆண்ட்ரியா, நடிகை ராதிகா, நடிகர் சேரன் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இரங்கல் கூட சொல்லல: அஞ்சலியில் கலந்து கொள்ள முடியாதவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் விஜய் இதுவரை இரங்கல் தெரிவிக்கவில்லை. நடிகர் தனுஷின் திரைப்பயணத்தின் மிக முக்கியமான படமான பொல்லாதவன் படத்தில் டேனியல் பாலாஜி ரவி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அதே போல, வட சென்னை படத்திலும் நடித்திருந்தார். இரண்டு படங்களில் அவருடன் நடித்துள்ளதால் தனுஷ், நிச்சயம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. அதே போல, விஜய் நடித்த பைரவா படத்தில டேனியல் ஒரு மிக முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். இவரும் ஒரு அறிக்கை கூட வெளியிடாதது இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X