ஏப்ரல் மாதம் அஜித்துடன் தனுஷ் மட்டுமில்லை.. விஜய்யும் மோத ரெடியாகிட்டாரே.. குட் பேட் அக்லி நிலைமை?

சென்னை: இந்த ஆண்டு பொங்கலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ம் தேதி வெளியான நிலையில், படத்தின் வசூல் பெருமளவில் பாதிப்படைந்துள்ளதாக கூறுகின்றனர். விஜய் நடிக்கும் படங்கள் முதல் நாளிலேயே 100 கோடிக்கும் அதிகமான வசூலை உலகளவில் ஈட்டி வரும் நிலையில், அஜித் குமாரின் விடாமுயற்சி 100 கோடி கிளப்பில் இணையவே 5 நாட்கள் எடுத்துக் கொண்டன.

இந்த வாரம் முழுவதும் படத்திற்கான வசூல் படுத்தே விட்டது என்கின்றனர். லைகா நிறுவனமும் பாக்ஸ் ஆபீஸ் அறிவிப்பை எல்லாம் அஜித் ரசிகர்கள் எவ்வளவு தான் ட்வீட் போட்டு கேட்டாலும் கொடுக்கவே மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளனர்.

Vijay Good Bad Ugly Ajith Kumar

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் லைகா நிறுவனத்துக்கு சோதனை காலம் தான் என்றும் அடுத்ததாக விஜய் மகன் படம் வெற்றி பெற்றால் தான் உண்டு என்றும் கூறி வருகின்றனர். இந்நிலையில், அஜித் குமாரின் அடுத்த படத்துக்கும் வேட்டு வைக்க தனுஷ் மற்றும் விஜய் ரெடியாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தனுஷின் விடாமுயற்சி: அக்கா மகனை அறிமுகப்படுத்த தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு கூட வருவதை தவிர்த்து விட்டு தனது இட்லி கடை படத்தை விடாமுயற்சியுடன் இயக்கி வருகிறார் தனுஷ். கண்டிப்பாக சொன்ன தேதியில் படத்தை வெளியிட வேண்டும் என உழைத்து வருகிறார். ஏப்ரல் 10ம் தேதி படம் வெளியாக வேண்டும் என்பதில் ரொம்பவே உறுதியாக உள்ளார் தனுஷ்.

சச்சின் ரீ ரிலிஸ்: கடந்த ஆண்டும் இதே போல தமிழ் சினிமாவில் ஒரு நல்ல படம் கூட வெளியாகி தியேட்டர்களை உற்சாகப்படுத்தாத நிலையில், விஜய்யின் கில்லி ரீ ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த ஆண்டு தளபதி விஜய்யின் ஜன நாயகன் வெளியாகுமா? அல்லது அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போகுமா என்கிற பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், சச்சின் படத்தை விஜய் ரசிகர்கள் தியேட்டரில் காண தயாராகி விட்டனர்.

குட் பேட் அக்லிக்கு சிக்கல்?: தனுஷின் இட்லி கடை மற்றும் விஜய்யின் சச்சின் ரீ ரிலீஸ் உள்ளிட்ட படங்கள் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தின் பாக்ஸ் ஆபீஸுக்கு மிகப்பெரிய சிக்கலை உருவாக்கும் என்கின்றனர். ஏற்கனவே விடமுயற்சி படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் முதல் நாள் கூட அந்த படத்துக்கு பெரிதாக ஓபனிங் இல்லாத நிலையில், குட் பேட் அக்லி படத்தை வாங்க தயக்கம் காட்டி வருவதாக கூறுகின்றனர். ஆனால், புஷ்பா 2 படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு என்பதால் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் மிகப்பெரிய ஓபனிங்கை கொண்டு வர அந்த நிறுவனம் பெரிய புரமோஷனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களுக்கு பிடிக்கும்: விடாமுயற்சி திரைப்படம் அஜித் ரசிகர்கள் பலருக்கும் பிடிக்காமல் போனது தான் வசூல் அடிவாங்க காரணம் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கும் பக்கா கமர்ஷியல் படமாக குட் பேட் அக்லி படம் இருக்கும் என்றும் இட்லி கடை, சச்சின் ரீ ரிலீஸ் இன்னும் எத்தனை படங்கள் வந்தாலும் அந்த படங்களுக்குத்தான் சிக்கல் என்றும் குட் பேட் அக்லி பந்தயம் அடிக்கும் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X