இதுதான் ரியல் 20 இயர்ஸ் சேலஞ்ச்.. விஜய்யுடன் தரணி.. வேறலெவல் கில்லி ரீ ரிலீஸ் கொண்டாட்டம்!
சென்னை: மம்மூட்டியை வைத்து எதிரும் புதிரும் படத்தை இயக்கி 1999 ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானவர் தரணி. அந்த படத்திற்கு பிறகு சியான் விக்ரமை வைத்து தில் படத்தை இயக்கினார். தில் படம் வெற்றியடைந்த நிலையில், மீண்டும் இணைந்த கூட்டணி தூள் படத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது.
அடுத்தடுத்து சியான் விக்ரம் சிக்ஸர் அடிக்கிறாரே யாருப்பா அந்த தரணி என நினைத்த விஜய், தூள் படத்தை பார்த்துவிட்டு 2004 ஆம் ஆண்டு கில்லி படத்தை இயக்கும் வாய்ப்பை தரணிக்கு கொடுத்தார். மகேஷ்பாபு நடிப்பில் தெலுங்கில் வெளியான ஒக்கடு படத்தின் தமிழ் ரீமேக்காக கில்லி வெளியானது.

கில்லி திரைப்படம் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அவர் நினைத்தபடியே அமைந்தது. அடுத்து பவன் கல்யாணை வைத்து தெலுங்கில் பங்காரம் எனும் படத்தை தரணி இயக்கினார். மீண்டும் நடிகர் விஜய் குருவி படத்துக்காக தரணியை அழைத்தார். கேஜிஎஃப் படம் போல வந்திருக்க வேண்டிய அந்த படம் ஓவர் பில்டப் காட்சிகளால் சொதப்பியது.
ஒஸ்திக்கு பிறகு ஒதுங்கிய தரணி: பாலிவுட்டில் சல்மான்கான் நடித்து வெளியான தபாங் படத்தை தமிழ் ரீமேக் செய்ய தரணி தான் சரியான ஆள் என நினைத்த நடிகர் சிம்பு அவளுடன் இணைந்து ஒஸ்தி படத்தை கொடுத்தார். ஆனால், அந்தப் படமும் தோல்வியை சந்தித்த நிலையில், அதன் பின்னர் படங்களை இயக்குவதை தரணி நிறுத்திவிட்டார். ராம்சரண், காஜல் அகர்வாலை வைத்து தரணி இயக்கவிருந்த தெலுங்கு படம் அறிவிப்புக்கு பின்னர் நிறுத்தப்பட்டது அவரை ரொம்பவே அப்செட் ஆக்கி விட்டது என்கின்றனர். 20 வருடம் கழித்து கில்லி படத்தின் ரீ ரிலீஸ் வெற்றி இயக்குநர் தரணியை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

20 கோடியை நெருங்கும் கில்லி: விஜய், திரிஷா நடித்து தரணி இயக்கத்தில் வெளியான கில்லி திரைப்படம் 18.5 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் 20 கோடி ரூபாய் வசூலை கில்லி படம் ஈட்டும் என்றும் கூறுகின்றனர். இந்த வாரம் விஷாலின் ரத்னம் படம் வெளியாக உள்ள நிலையில், கில்லி படம் இந்த வார இறுதி வரை ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
20 இயர்ஸ் சேலஞ்ச்: கில்லி படத்தின் இயக்குநர் தரணி நேற்று தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னமுடன் இணைந்து நடிகர் விஜய்யை கோட் படத்தின் ஷூட்டிங்கில் சந்தித்து மாலை அணிவித்து நன்றி தெரிவித்த காட்சிகள் வெளியாகின. இயக்குநர் தரணிக்கு தளபதி விஜய் சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய ஸ்டில் தற்போது தீயாக பரவி வருகிறது. இதுதான் ரியல் 20 இயர்ஸ் சேலஞ்ச் என ரசிகர்கள் கில்லி சமயத்தில் எடுத்த புகைப்படத்தையும் தற்போது எடுத்த புகைப்படத்தையும் கம்பைன் செய்து ஷேர் செய்து வருகின்றனர். மீண்டும் தரணி தரமான கமர்ஷியல் படங்களை கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.


Click it and Unblock the Notifications











