நான் ரெடி தான் வரவா.. பத்தல பத்தல.. கடந்த 2 நாளா இந்த சாங்ஸ் தான் சோஷியல் மீடியா டிரெண்டிங்கே!

சென்னை: விஜய் போன்ற 500 கோடிக்கும் அதிகமான சொத்து வைத்திருக்கும் ஒரு நபரே திடீரென அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடித்து விட முடியாது என்பதை இந்நேரம் வெகுஜன ரசிகர்கள் நன்றாகவே புரிந்து வைத்திருப்பார்கள்.

அரசியல் ஒரு சாக்கடை என அந்த காலத்தில் இருந்தே சொல்லி வந்த நிலையில், நல்லவர்கள் ஏன் அரசியல் பக்கம் வருவதில்லை என்கிற கேள்விகளுக்கும் இந்நேரம் விடை கிடைத்திருக்கும்.

Vijay and Governor singing these 2 songs for the past two days meme goes viral

மக்களாட்சி என்பது பெயர் அளவில் மட்டுமே உள்ளது என்றும் மன்னராட்சி சிந்தனை தான் அரசியல் தலைவர்களிடம் உள்ளதாக ட்ரோல்கள் கிளம்பி வரும் நிலையில், கடந்த 2 நாட்களாக இந்த பாடல்கள் தான் டிரெண்டாகி வருகிறது என லோகேஷ் கனகராஜ் இயக்கிய 2 படங்களின் பாடல்களை வைரலாக்கி வருகின்றனர்.

நான் ரெடி தான் வரவா: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்த லியோ படத்தில் இடம்பெற்ற "நான் ரெடிதான் வரவா" பாடலை அனிருத் என்ன நினைத்து இசையமைத்தாரோ விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்து முதல்வர் நாற்காலியை எட்டிப் பிடிக்க இன்னும் 2 சீட் கிடைத்தால் போதும் என முயற்சித்து வருகிறார். விஜய்யை சிஎம் ஆக்கிவிடவே கூடாது என பக்கவான அரசியல் சதுரங்க விளையாட்டை அரசியல் தலைவர்கள் ஆடி வருகின்றனர் என்றும் பாஜக விஜய்யை வழக்கில் சிக்க வைத்து அவரது கனவை உடைக்க பக்கா பிளானை அமமுக மூலம் போட்டுள்ளது என்கின்றனர்.

பத்தல பத்தல: ஒவ்வொரு முறையும் விஜய் நான் ரெடி தான் வரவா என ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநரை சந்தித்து வரும் நிலையில், அவர் "பத்தல பத்தல" என அனிருத் இசையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் பாடலை பாடி திருப்பி அனுப்புகிறார் என்று கலாய்த்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக இந்த பாடல்கள் தான் டிரெண்டிங் என மீம் ஒன்றும் வைரலாகி வருகிறது.

ஜனாதிபதி ஆட்சி வருமா?: விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக புகார்கள் கிளம்பி உள்ள நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சி தமிழ்நாட்டுக்கு வரும் என்றும் அப்படி வந்தால், தமிழ்நாடு இதுவரை தடுத்து வந்த மும்மொழிக் கொள்கை திட்டம் உள்ளிட்ட பல மத்திய அரசு திட்டங்கள், இந்தி திணிப்பு என எல்லாமே இங்கே தலை விரித்தாடும் என்றும் மக்கள் புரட்சி வெடிக்கும் அபாயமும் உள்ளதாக கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X