நண்பன் இறந்த துக்கம்.. கலங்கிய முகத்துடன் விஜய்.. கூடவே சென்ற சஞ்சீவ்.. அலைமோதிய கூட்ட நெரிசல்

சென்னை: நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், நேற்று மாலை உயிரிழந்தார். நேற்று இரவு அவரது உடல் நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்துக்கு எடுத்து வரப்பட்டு இறுதிச்சடங்கிற்காக வைக்கப்பட்டுள்ளது. நள்ளிரவே நடிகர் கார்த்தி, இயக்குநர் மாரி செல்வராஜ், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டு உருக்கமாக முதல் ஆளாக அஞ்சலி செலுத்தினார். அதிகாலையில் சிவகுமார், சூர்யா, வைரமுத்து, பிரபு உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் வந்து மனோஜ் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர்.

Vijay and his friend Sanjeev pays final tribute to Manoj Bharathiraja

நடிகர் விஜய்யின் வீடும் இயக்குநர் பாரதிராஜாவின் வீடும் அருகருகே உள்ள நிலையில், நடிகரும் தவெகவின் தலைவருமான விஜய் தனது வீட்டில் இருந்து நடந்தபடியே வந்து அஞ்சலி செலுத்திய காட்சிகள் வெளியாகின. விஜய்யுடன் அவருடைய உயிர் நண்பரான சீரியல் நடிகர் சஞ்சீவ் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.

பல வருட நட்பு: விஜய் மற்றும் பாரதிராஜாவின் வீடுகள் அருகருகே உள்ள நிலையில், பல வருடங்களாக விஜய் மற்றும் மனோஜ் இருவரும் நெருங்கிய நண்பர்களாகவே பழகினர். தனது நண்பன் மனோஜ் உயிரிழந்த செய்தியை அறிந்து தனது நீலாங்கரை வீட்டில் இருந்து விஜய் வெளியே வந்ததும் ஒட்டுமொத்த மீடியாக்களும் ரசிகர்களும் விஜய்யை சூழ்ந்துக் கொண்டனர். அவர் அங்கிருந்து பக்கத்துக்கு வீட்டுக்கு செல்லவே பல நிமிடங்கள் ஆகிவிட்டன.

கண்ணீர் மல்க அஞ்சலி: கலங்கிய கண்களுடன் நடிகர் விஜய் தனது நண்பன் மனோஜ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய காட்சிகள் ரசிகர்களை உருக்கி வருகிறது. தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடன் மனோஜ் நட்பாகவே பழகி வந்தார். அஜித் குமார், சூர்யா, விஜய் என பலருடன் அவர் நட்பாக பழகி வந்த நிலையில், சிவகுமார் அவரது மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி நேரில் வந்து அஞ்சலி செலுத்திய காட்சிகளும் வெளியாகின.

கூடவே சென்ற நண்பன்: நடிகர் விஜய்யுடன் புதிய கீதை உள்ளிட்ட சில படங்களில் இணைந்து நடித்த சின்னத்திரை நடிகர் சஞ்சீவ் தளபதி விஜய் மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்த வீட்டில் இருந்து வெளியேறும் போது அவர் கூடவே வந்து அவரும் அஞ்சலி செலுத்தினார். போலீஸார் பாதுகாப்புடன் கூட்ட நெரிசலுக்கு இடையே நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நிலையில், சோஷியல் மீடியா முழுவதும் அதன் காட்சிகள் தீயாக பரவி வருகின்றன.

பாரதிராஜாவுக்கு ஆறுதல்: இயக்குநர் இமயம் பாரதிராஜா தனது மூத்த மகனை இழந்து வாடி துடித்துக் கொண்டிருப்பதை பார்த்தாலே கண்கள் குளமாகிவிடும். நடிகர் விஜய் மனோஜ் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்திய நிலையில், அமர்ந்திருந்த பாரதிராஜாவுக்கு கண்ணீர் மல்க ஆறுதல் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார். மேலும், பல திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை 4 மணியளவில் பெசன்ட் நகரில் இறுதிச்சடங்கு நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X